ஐரோப்பா

50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் உலக சாதனை படைத்த திருமண ஆடை!

  • May 14, 2023
  • 0 Comments

மிலினில் நடைபெற்ற பேஷன் ஷோவில், 50000க்கும் அதிகமான படிகங்களுடன் தயாரிக்கப்பட்ட, திருமண ஆடை உலக சாதனை படைத்துள்ளது. மிலனில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில், 50,890 ஸ்வரோவஸ்கி படிகங்கள் கொண்ட ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் மேல்சட்டையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளன. இதை தைப்பதற்காக மட்டும் 200 மணி நேரம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு […]

ஆசியா

கரையை கடக்கும் மோக்கா புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

  • May 14, 2023
  • 0 Comments

தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. மோக்கா புயல் இன்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள தியாக்பியூ இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ […]

இலங்கை

சீனாவின் அரசியல் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகும் இலங்கை!

  • May 14, 2023
  • 0 Comments

சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கினால் இலங்கையில் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் பிரிட்டனின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்செல் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். எனது நண்பர் குறிப்பிட்ட கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் உக்ரைன் மீதான ரஸ்ய படையெடுப்பின் தாக்கம் ஆகிய அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக நிதியை தவறான முகாமை செய்தமை உட்பட […]

செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

  • May 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை ஸ்ரீ அய்யனார் கோவில் விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் பங்கேற்றுள்ளன 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்கு தயாராக இருக்கின்றனர். வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் […]

இலங்கை

20000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாரா, களுத்துறையில் உயிரிழந்த மாணவி?

  • May 14, 2023
  • 0 Comments

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 20000க்கு விற்பனை செய்யுமாறு தனது தோழியுடன் விடுதியில் இருந்த இளைஞன் (22) யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாரின் சந்தேகத்தின்படி பிரதான சந்தேக நபரிடம் குறித்த மாணவியை விற்பனை செய்தமைக்காக 22 வயதுடைய இளைஞன் இந்தத் தொகையில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளார். மே 06 […]

மத்திய கிழக்கு

துருக்கி அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு தீவிரம்

  • May 14, 2023
  • 0 Comments

துருக்கி தாயீப் எர்டோகன் (69). இவர் 2003ம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சியை செய்து வருகிறார். 2003ம் ஆண்டு துருக்கி பிரதமரான எர்டோகன் 2014 ஆகஸ்ட் வரை வரை பிரதமராக செயல்பட்டார். துருக்கியில் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு உச்சபட்ச அதிகாரமாக அதிபர் பதவி கொண்டுவரப்பட்டது. இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 9 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கி அதிபராக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் தன்வசம் கொண்டுள்ள எர்டோகன் […]

பொழுதுபோக்கு

“வாத்தி” வெற்றியுடன் இணைந்த மற்றுமொரு கூட்டணி

  • May 14, 2023
  • 0 Comments

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில் தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 8 பேர் பாதிப்பு!

  • May 14, 2023
  • 0 Comments

இலங்கையில் கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16853 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும் 2 கொவிட் -19 மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை  கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன்படி  இலங்கையில் 67,2283 பேர் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

திருமணமே செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இஞ்சி இடுப்பழகி

  • May 14, 2023
  • 0 Comments

நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு அவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான நிலையில் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் […]

இலங்கை

காணாமல் போனதாக கூறப்பட்ட 4 சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • May 14, 2023
  • 0 Comments

காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று (14) அதிகாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காலி – நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேச பொலிஸ் நிலையத்தில் வினவிய போது காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களும் இன்று (14) காலை கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த நான்கு சிறுவர்களின் தாய்களில் ஒருவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

Skip to content