ஆஸ்திரேலியா

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை 65 பெண்களுக்கு வழங்கிய விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்!

  • May 17, 2023
  • 0 Comments

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள 65 பெண்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெல்பேர்னின் தென் கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள முகவரிகளுக்கு இந்த ஆணுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பெண்கள் அனைவரும்,  மெல்பேர்னின் கில்ப்ரேடா கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்கள் என நம்பப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட ஆணுறை அனுப்பப்பட்டமை குறித்து முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் பெண்ணொருவர் தெரிவித்திருந்தார். இறுதியாக கடந்த திங்கட்கிழமை ஒருவர் இது குறித்து […]

பொழுதுபோக்கு

“வச்சிட்டாய்ங்கடா ஆப்பு….” வடிவேல் குறித்து வெளியான சர்ச்சை – கொதிக்கும் ரசிகர்கள்

  • May 17, 2023
  • 0 Comments

சினிமா மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரு வேலைசாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்த வடிவேலு, நண்பரின் உதவியுடன் ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடியாக வேலை செய்தார். கிராமத்து டான்ஸ் ஆடுவதில் கெட்டிக்காரரான வடிவேலுவை, ராஜ்கிரண் என் ராஜாவின் மனசிலே படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பின் தேவர்மகன் படத்தில் ஒரு […]

ஆசியா

சீன மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து விபத்து; 39 பேர் மாயம்

  • May 17, 2023
  • 0 Comments

சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல் ஒன்று மத்திய இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 39 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் 17 பேர் சீன பிரஜைகள், 17 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் மேலும் 5 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களாகும். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு […]

செய்தி தமிழ்நாடு

திடீரென ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

  • May 17, 2023
  • 0 Comments

பாலன்நகர் என்ற பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சினை சாலை வசதிகள் தெருவிளக்கு போன்ற பொது மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்தார். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகம் செய்யும் பொருட்கள் குறித்து சரியான முறையில் சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா எனவும்,அரிசி கோதுமை சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா? எனவும் ஆய்வு […]

வட அமெரிக்கா

கனடாவில் 12 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகளை வளர்த்த இருவர் கைது

  • May 17, 2023
  • 0 Comments

கனடாவில் 12 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் சென் கெதரீன்ஸ் பகுதியில் இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆயிரம் செடிகளை வளர்ப்பதற்காக அனுமதி பெற்றுக்கொண்டு 11800 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மேலும், 77 கிலோ கிராம் எடையுடைய பொடியாக்கப்பட்ட கஞ்சா இலைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அனுமதியின்றி கஞ்சா செய்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 40 வயதான மற்றும் […]

செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

  • May 17, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ராயவரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர் பொதுமக்கள் சேர்ந்து தேரின் வடம் பிடித்து இழுத்தனர், பொதுமக்களால் இழுக்கப்பட்ட தேரானது கோவிலை சுற்றியுள்ள குளம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய தெருக்களில் தேர் வீதி உலா வந்தது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனின் அருள் பெற்று சென்றனர். இந்த தேர்த்திருவிழாவிற்கு காவல்துறையினர் பாதுகாப்பினை […]

செய்தி தமிழ்நாடு

செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

  • May 17, 2023
  • 0 Comments

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடபட்டது. அன்னை அறவணைப்பு கல்வி அறக்கட்டளை மற்றும் சோலை ஷிப்பிங்க் நிருவணம் சார்பில் அன்னை அறவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் தேவி மணி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் நிர்வாகிகள் மற்றும் தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு செவிலியர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அனைத்து செவிலியர்களும் சிறந்த முறையில் பணியாற்றுவது என […]

இலங்கை

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

  • May 17, 2023
  • 0 Comments

இலங்கையர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று வெப்பச் சுட்டெண் கணிசமான மட்டத்தில் அதிகரிக்கக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதாலும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் சோர்வு ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கின்றது. நீரிழப்பு மற்றும் உமிழ்நீர் இழப்பு காரணமாக, தசைப்பிடிப்பு போன்ற நிலைமைகளும் ஏற்படலாம், அதற்கேற்ப, போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் இருக்குமாறும் அந்தத் திணைக்களம் மக்களை […]

பொழுதுபோக்கு

“ரஷ்மிகாவை விட நான் தான் அதற்கு பொறுத்தமாக இருப்பேன்” ஐஸ்வர்யா தடாலடி

  • May 17, 2023
  • 0 Comments

நடிகை ரஷ்மிகா மந்தனாவை விட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில், “தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல […]

செய்தி தமிழ்நாடு

கறிக்கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டு

  • May 17, 2023
  • 0 Comments

குன்றத்தூர், மேத்தா நகரை சேர்ந்தவர் பத்மகுரு(42), குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடையில் இருந்தபோது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பத்மகுருவை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயமடைந்த பத்மகுரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை […]

Skip to content