இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

கொழும்பில் இன்று இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும். அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் […]

ஆசியா

சிங்கப்பூரில் 3 வாரங்களில் 2வது நபருக்கு தூக்கு தண்டனை!

  • May 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் நேற்று மேலும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா என்ற 46 வயதுடையவருக்கு கடந்த ஏப்ரல் 26-ம் திகதி சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது. தங்கராஜிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கடத்தலை கையடக்க தொலைபேசி மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என எதிர்ப்பு கிளம்பியது. […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மகளை தாக்கி விசம் கொடுத்த தந்தை

  • May 19, 2023
  • 0 Comments

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தில் தனது மகளை தாக்கி, விசம் கொடுத்ததற்காக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரின் மூன்று பெண் பிள்ளைகள் பாதுகாப்பு நிமித்தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான அவரின் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் கடந்த 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 20 வயதான யுவதி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரைப் போல மாறும் பேஸ்புக் – மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு

  • May 19, 2023
  • 0 Comments

டுவிட்டரைப் போல ப்ளூடிக் சந்தா சேவையை பேஸ்புக்க்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான டுவிட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக, இந்த டுவிட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது. ஆனால், டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியவுடன் சந்தா செலுத்தினால் மட்டுமே ப்ளூடிக் வசதி உண்டு என்ற மாற்றத்தை கொண்டு வந்தார். அதிலிருந்து, பயனர்கள் […]

கருத்து & பகுப்பாய்வு

தினசரி பயன்படுத்தும் பல பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

தினசரி பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான பொருள்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சவர்க்காரம், ஷெம்போ எனும் முடியைக் கழுவும் திரவம் முதல் பாத்திரம் கழுவும் திரவம், சலவைக்குப் பயன்படுத்தப்படும் சவர்க்காரம் வரையிலான பொருள்களில் இரசாயனம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Environmental Science & Technology சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் California பல்கலைக்கழகம், Silent Spring Institute எனும் சுகாதார ஆய்வு அமைப்பு ஆகியவை California மாநிலத்தின் தகவல் தளங்களை ஆராய்ந்தன. குறிப்பாக, காற்றில் எளிதில் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிலேயே அதிக விலை – கின்னஸ் சாதனை படைத்த ஐஸ்கிரீம்

  • May 19, 2023
  • 0 Comments

ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற சாதனையை அந்த ஐஸ்கிரீம் படைத்துள்ளது. ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் மதிப்பாகும். இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக […]

ஆசியா

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

  • May 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து ஏதேனும் புகார் இருப்பின் அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. FAST குழு அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவிக்கலாம் என MOM தெரிவித்துள்ளது. அனைத்து விடுதிகளிலும் சோதனை கண்காணிப்பு தொடர்ந்து வழக்கம்போல நடைபெறுவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். விடுதிகளில் உள்ள சமையலறை சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிப்பதாக அவர் கூறினார். வெளி இடங்களில் இருந்து உணவுகளை வாங்கும்போது முறையாக உரிமம் பெற்ற […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் ஆறு மாத மழை ஒன்றரை நாளில் பெய்தது – 13 பேர் உயிரிழப்பு

  • May 19, 2023
  • 0 Comments

இத்தாலியில் ஆறு மாத மழை ஒன்றரை நாளில் பெய்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்ட ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால், 13 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 115 கிமீ (70 மைல்) தொலைவில் உள்ள போலோக்னா மற்றும் வடகிழக்கு கடற்கரைக்கு இடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வியாழக்கிழமை மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சுமார் 280 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரமான ரவென்னாவின் மேயர், […]

ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தலாக மாறிய சிறுவர்கள் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • May 19, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். antes-la-Jolie (Yvelines) நகர பொலிஸாரால் குறித்த சிறுவர்கள் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் Yvelines மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 12 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள சிகரெட் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், தொலைபேசி விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 6 கொள்ளைகளில் அவர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கை பல்வேறு வைரஸ்கள் அச்சுறுத்தும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 18, 2023
  • 0 Comments

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது. தற்போது, கணிசமான எண்ணிக்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். அத்துடன் இறப்புகளும் பதிவாவதால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பல வைரஸ் […]

Skip to content