வட அமெரிக்கா

ப்ளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு- 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்

  • May 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஹாலிவுட் என்ற பகுதியிலுள்ள கடற்கரை நடைபாதையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானதாக்குதல்கள்!

  • May 30, 2023
  • 0 Comments

ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக கட்டிடங்களிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன மொஸ்கோவை நோக்கி வந்த பல ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த ஆளில்லா விமானங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. ரஸ்ய தலைநகர் மீது புகைமண்டலங்களையும் உடைந்த ஜன்னல் கண்ணாடிகளையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிலுள்ள பௌத்த விகாரைக்குள் நடந்தேறிய திருட்டு சம்பவம்

  • May 30, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய அடிலெய்டில் உள்ள இலங்கையின் பௌத்த விகாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் போது அவர் 3000 அவுஸ்திரேலியா டொலர்களை திருடிச்சென்றுள்ளமை சீசீடிவி கமராவில் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் ஏற்கனவே தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மற்றொரு விகாரையில் அண்மையில் பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.இவ் விகாரையில் இருந்து அவர் 800 டொலர்களை திருடிச்சென்றதாக முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“மாமன்னன்” படம் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு

  • May 30, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக ஜொலித்து வந்தார். இதையடுத்து அரசியலில் எண்ட்ரி கொடுத்த உதயநிதி, தற்போது அமைச்சர் ஆனதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். உதயநிதி கடைசியாக நடித்த திரைப்படம் மாமன்னன். […]

வட அமெரிக்கா

கனடாவில் வாத்துக்களை காப்பாற்ற நினைத்தவருக்கு 8 மாத சிறைத்தண்டனை

  • May 30, 2023
  • 0 Comments

கனடாவில் வீதியை கடந்த வாத்துக் குடும்பம் ஒன்றை காப்பாற்றும் நோக்கில் வீதி தடத்தை மாற்றிய ட்ரக் சாரதிக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரக் வண்டியை செலுத்திய போது எதிரில் வாத்துக் குடும்பம் ஒன்று வீதியை கடப்பதனை அவதானித்த சாரதி, தான் செல்ல வேண்டிய வீதி தடத்திலிருந்து விலகி மாற்று வீதித் தடத்தில் வண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ட்ரக் வண்டியில் மோதுண்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் […]

பொழுதுபோக்கு

விவாகரத்தான நடிகருக்கு சாய் பல்லவி மீது ஒருதலைக் காதல்!!

  • May 30, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, மீது தனக்கு கிரஷ் இருப்பதாக விவாகரத்தான நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் கடந்த 2015- ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சாய் பல்லவி இளசுகளின் கிரஷ் லிஸ்ட்டில் இணைந்து விட்டார். […]

அறிந்திருக்க வேண்டியவை

2030ஆம் ஆண்டில் மனிதர்கள் நிலவில் வாழ வாய்ப்பு?

  • May 30, 2023
  • 0 Comments

2030ஆம் ஆண்டில் மனிதர்கள் நிலவில் வாழ வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்தது. இது குறித்து, விண்வெளிக்கு ஆட்களை அனுப்புவதற்கான சீன விண்வெளிய ஆய்வு மையப் பிரிவான சிஎம்எஸ்ஏ-வின் இணை இயக்குநர் லின் ஷிகியாங் கூறியதாவது: எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரா்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரத்துக்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப […]

ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சீன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – நாய் என கூறியதால் சர்ச்சை

  • May 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் விமான நிலையத்தில் உள்ள China Southern ஏர்லைன்ஸ் கவுன்டரில் சோதனையிட்ட பணியாளர்கள் தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும், நாய் என்று அழைத்ததாகவும் சீனப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து China Southern ஏர்லைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியதுடன் சம்பவத்திற்கு தொடர்புடைய அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீன ஊடகத் தகவல்களுக்கமைய, Yuan என அழைக்கப்படும் பயணி கடந்த செவ்வாயன்று சிங்கப்பூரில் இருந்து Chongqingகிற்கு CZ546 என்ற விமானத்தில் பயணிக்க தயாராகியுள்ளார். emergency exitக்கு அருகில் […]

பொழுதுபோக்கு

லியோ படத்தில் தனுஷ்!! லோகேஷின் டாப் சீக்ரெட் தகவல் கசிந்தது….

  • May 30, 2023
  • 0 Comments

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின்னர் விஜய் – லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், லியோ மீதான எதிர்பார்ப்புக்கு அளவே இல்லை. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் தனுஷும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே, நடிகர் விஷாலை லோகேஷ் கனகராஜ் சந்தித்தார். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பதிவான மிக அரிய நிலநடுக்கம் – நூறு ஆண்டுகளில் இதுவே முதல்முறை

  • May 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மிகவும் அரியதொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த நூறாண்டுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று முன்தினம் உலுக்கியது. 3.8 நிக்டர் அளவிலான நிலநடுக்கம் இரவு சுமார் 11.41 மணியளவில் ஏற்பட்டது. அதன் ஆழம் 2 கிலோமீட்டர் என்று Geoscience Australia அரசாங்க நிறுவனம் தெரிவித்தது. கட்டடங்கள் அசைந்தபோதிலும் நிலநடுக்கம் அங்கு அதிகச் சேதத்தை ஏற்படுத்தவில்லை. இதற்குமுன் கடைசியாக 1902ஆம் ஆண்டில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மெல்பர்னில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கத்தைப் பல மெல்பர்ன் குடியிருப்பாளர்கள் […]

Skip to content