செய்தி தமிழ்நாடு

போதையில் நடுரோட்டில் உறக்கம்

  • May 31, 2023
  • 0 Comments

கோவை பார்க் கேட் நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகள், டீக்கடைகளும் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை வேலைகளில் இப்பகுதியில் அதிகமானோர் நடைபயணம் மேற்கொள்வர். குறிப்பாக இப்பகுதியில் வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம் ஆகியவை இருப்பதால் மாலை வேலைகளில் குழந்தைகளுடன் பெரியவர்கள் குடும்பம் குடும்பமாய் அப்பகுதியில் பொழுதை கழிப்பர். […]

செய்தி தமிழ்நாடு

பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

  • May 31, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் புறப்பட்டு புதுக்கோட்டை சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் பட்டா கேட்டு மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றிய முழுவதும் அரசு புறம்போக்கு இடங்களில் பல்லாண்டு காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் வகை மாற்றம் […]

செய்தி தமிழ்நாடு

திருவிழா நாடகத்தில் குத்தாட்டம் போட்டு அசத்திய திருநங்கைகள்

  • May 31, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கூழ் வார்த்தல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை பம்பை, உடுக்கை வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபா ஆராதனைகள் நடந்தேறியது. பின்னர், மதியம் கூழ் வார்த்தல் விழாவும், இரவு வானவேடிக்கைகளுடன் […]

ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து – பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

  • May 31, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. வேகக் கட்டுப்பாட்டைத் தாண்டி வாகனமோட்டியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த முப்பத்தைந்து வயது பெண் ஓட்டிச் சென்ற Mazda3 கார் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு லாரி, ஒரு காருடன்டி அதில் முப்பத்தொரு வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். மத்திய அதிவேக சாலையில் எண்பது கிலோமீட்டர் வேகக்கட்டுப்பாடு இருந்த பகுதியில் அவர் குறைந்தது மணிக்கு 118 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு இரண்டரை ஆண்டுச் […]

ராசிபலன்

மென்மேலும் வளர்விர்கள் மேஷ ராசி நேயர்களே

  • May 31, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வேலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். அஸ்வினி : […]

பொழுதுபோக்கு

தி “கேரளா ஸ்டோரி” கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

  • May 31, 2023
  • 0 Comments

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த கமல்ஹாசனை அப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் வெளுத்துவாங்கி உள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆன திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கடந்த மே 5-ந் தேதி வெளியான இப்படத்திற்கு ரிலீசுக்கு முன்பே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு காரணம் இப்படத்தில் கேரளாவை சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமிய நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து பயங்கரவாத அமைப்புகளில் […]

ஆஸ்திரேலியா

நியூஸிலாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • May 31, 2023
  • 0 Comments

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 33 கிலோமீற்றர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து, கிட்டிய தூரத்திலுள்ள மக்கள் வசிக்கும் நகரான இன்வரகார்கிலில் உள்ள அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை எனக் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் வெப்பம் – சூரிய ஒளியால் கண்களுக்கு பாதிப்பு

  • May 31, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நேரடியாக சூரிய ஒளி அதிகமாகப்படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

  • May 31, 2023
  • 0 Comments

க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எந்த பாடசாலைகளிலும் வெளி தரப்பினர் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 472,553 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு […]

ஐரோப்பா

இத்தாலியில் திடீரென பச்சை நிறமாக மாறிய கால்வாய் – குழப்பத்தில் பொலிஸார்

  • May 31, 2023
  • 0 Comments

இத்தாலியில் புகழ்பெற்ற கிராண்ட் கால்வாயின் ஒரு பகுதி பச்சை நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிஸ் நகரில் உள்ள கால்வாயிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களே அதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நீரின் நிறம் மாறியிருப்பதை முதலில் நகரவாசிகள் உணர்ந்ததாக அப்பகுதியின் தலைவர் லூகா சையா (Luca Zaia) தமது Twitter பக்கத்தில் தெரிவித்தார். சுற்றுப்பயணிகள் பச்சை நிற நீரைப் படம் எடுத்தனர். அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு […]

Skip to content