ஆப்பிரிக்கா

சமரச பேச்சுக்களை இடைநிறுத்தியது சூடானிய இராணுவம்!

  • May 31, 2023
  • 0 Comments

சூடானின் துணை இராணுவப் படையினருடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடானிய இராணுவம் இடைநிறுத்தியுள்ளது. தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு துணை இராணுவப் படை தவறியுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்துகிறது. இதனால் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக சூடான் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. போர்நிறுத்த விதிகளை இரு தரப்பினரும் மீறியுள்ளனர் என மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் எனினும்இ இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசையில் தக்கவைத்திருப்பதற்காக இதுவரை தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. […]

இலங்கை

சூதாட வட்டிக்கு வாங்கிய பணத்திற்காக மகளை விற்ற தந்தை

  • May 31, 2023
  • 0 Comments

தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டிலேயே நடத்திய சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மகளே இவ்வாறு விற்கப்பட்டுள்ளார் என்று அகலவத்த பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர். கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த முதலாளி, சிறுமிக்கு தொலைபேசியையும் வாங்கிக் கொடுத்துள்ளார். […]

மத்திய கிழக்கு

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் ஐவர் பலி

  • May 31, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய […]

பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷின் திருமண செய்தி குறித்து தந்தை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..

  • May 31, 2023
  • 0 Comments

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சர்ச்சைக்கு அவரது தந்தை உருக்கமாக பேசி காணொளி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் பேசப்பட்டு வருகின்றது. ஆம் கீர்த்தி சுரேஷ் அனிருத், கல்லூரி நண்பர், தொழிலதிபர் என பலரையும் வைத்து காதல் சர்ச்சை எழுந்தது. தற்போது துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பர்ஹான் என்பவருடன் […]

ஐரோப்பா

Tesco Clubcard வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

  • May 31, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் டெஸ்கோ கிளப்கார்டின் £15 மில்லியன் பெறுமதியான வவுச்சர்கள் இன்றுடன் காலாவதியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்கள் மே 2021 இல் வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் காலாவதியாகுகிறது. ஆகவே  ஸ்டோர், ஆன்லைன் அல்லது கிளப்கார்ட் ரிவார்ட் பார்ட்னர்களுடன் நள்ளிரவுக்கு முன் வவுச்சர்களை மீட்டெடுக்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டுள்ள கடைக்காரர்கள் டெஸ்கோவில் பணம் செலவழிக்கும்போதோ அல்லது பல்பொருள் அங்காடியின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வாங்கும்போதோ புள்ளிகளைச் சேகரிக்கின்றனர். ஒரு வவுச்சரைப் பெற குறைந்தபட்சம் 150 […]

வட அமெரிக்கா

மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள டொனால்ட் டிரம்ப்

  • May 31, 2023
  • 0 Comments

ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன் என மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார் அமெரிக்காவின் முன்னாள் டொனால்ட் டிரம்ப் . 125வருடங்களிற்கு முன்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில்,நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அன்றைய தினமே ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைப்பதை தடுப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடுவேன் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். குடியேற்றவாசிகளிற்கு எதிரான […]

ஐரோப்பா

ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் விபத்து!

  • May 31, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘ட்ரோன்’ ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தினால்  எந்த உள்கட்டமைப்பும் சேதமடையவில்லை என்று Krasnodar பிரதேசத்தின் செயல்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 15 மைல் தொலைவில் உள்ள அஃபிப்ஸ்கி சுத்திகரிப்பு ஆலையை ஆளில்லா விமானம் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. .

ஐரோப்பா

சுவிஸில் மார்பில் குத்தப்பட்ட கத்தியுடன் நடந்து வந்த இளம்பெண்..

  • May 31, 2023
  • 0 Comments

தன் கணவனால் கத்தியால் குத்தப்பட்ட ஒரு இளம்பெண், கையில் குழந்தையுடனும், மார்பில் கத்தியுடனும் நடந்துவந்த சம்பவம் ஒன்று சுவிஸ் மாகாணம் ஒன்றில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. நேற்று, ஜெனீவாவிலுள்ள Petit-Lancy என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தனது 30 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடனும், மார்பில் குத்தப்பட்ட கத்தியுடனும் நடந்து வருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என […]

இலங்கை

துருக்கி மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவை!

  • May 31, 2023
  • 0 Comments

கொழும்பு மற்றும் துருக்கிய நகரமான இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொழும்பு மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் Demet Sekercioglu மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில்  விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. […]

பொழுதுபோக்கு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கே டாப் கொடுக்கும் ராஜலட்சுமி செந்தில்? அட்டகாசமான டிரெய்லர்

  • May 31, 2023
  • 0 Comments

நாட்டுப்புற பாடகர் ஜோடியான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஆகியோர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று அடுத்த கட்டத்திற்கு சென்றனர். எட்டாவது சீசன் வெற்றியாளராக முடிசூட்டப்பட்ட செந்தில் கணேஷ் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்துள்ளார், அதில் ராஜலட்சுமியும் கேமியோ ரோலில் தோன்றியுள்ளார். இப்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘லைசென்ஸ்’ படத்தின் ராஜலக்ஷ்மி மிக முக்கிய கதாப்பாத்திரத்தில், மெயின் ஹீரோயின் என்றே சொல்லாம். அப்படிப்பட்ட ரோலில் நடிக்கின்றார். சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களைப் பாதுகாக்க துப்பாக்கிகளைப் […]

Skip to content