இத்தாலியில் 7 மாத கர்ப்பிணியை குத்தி கொலை செய்த காதலன்..!
இத்தாலியிலுள்ள மிலனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தன் காதலனான Alessandro Impagnatiello (30)உடன் வாழ்ந்துவந்த ஏழு மாத கர்ப்பிணியான Giulia Tramontano (29), ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக கிடைத்த தகவலின்பேரில். பொலிஸார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள். Giulia தன் காதலனுடன் வாழ்ந்துவந்த வீட்டை பொலிஸார் சோதனையிடும்போது, அங்கு இரத்தத்துளிகள் கிடப்பதைக் காணவே, பொலிஸாரின் சந்தேகம் Giuliaவின் காதலனான Alessandro மீது திரும்பியுள்ளது.சுமார் மூன்று நாட்கள் விசாரணைக்குப்பின், புதன்கிழமை நள்ளிரவு, தான்தான் Giuliaவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் Alessandro. […]