உலகம்

ஜோகன்னஸ்பர்க்கில் சிறிய நிலநடுக்கம் பதிவு!

  • June 12, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம் ஏற்படுவது அரிது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, கடைசியாக 2014 இல் 5.0 அளவு […]

ஐரோப்பா வட அமெரிக்கா

ரஷ்யாவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அமெரிக்க பாடகர்

  • June 12, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி விற்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்தநிலையில் மைக்கேல் டிராவிஸ் என்ற அமெரிக்க பாடகர் ஒருவர் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் மெபேட்ரோன் என்ற உயர்ரக போதைப்பொருளை விற்றது பொலிஸாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து போலிஸார் மைக்கேலை கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு அந்த கோர்ட்டில் […]

இலங்கை

டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள் : சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

  • June 12, 2023
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானோர் மாணவர்கள் என  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அச் சபையின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கடந்த சில மாதங்களில் 42,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  மொத்த டெங்கு நோயாளர்களில் 50% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். […]

வட அமெரிக்கா

கியூபாவில் 4 ஆண்டுகளாக இயங்கும் சீன உளவு நிலையம் – அமெரிக்கா தகவல்

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்கா-சீனா இடையிலான உறவு நீண்ட காலமாக மோதல் போக்கிலேயே இருந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றவுடனே, உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு குழுவிடம் அமெரிக்க உளவு அமைப்புகள் எடுத்துக்கூறின. கடந்த ஆண்டு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சென்றார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. […]

இலங்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

  • June 12, 2023
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் மொத்தக் கட்டணங்கள் 3% குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான கட்டண திருத்தங்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் வசூலிக்கப்படும் கட்டணம் 26.9% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 31-60க்கு இடைப்பட்ட யூனிட்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் 10.8% […]

இலங்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு!

  • June 12, 2023
  • 0 Comments

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 மே மாதத்தில் இலங்கை பணியாளர்களின் பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி – மே 2023) மொத்த எண்ணிக்கை USD 2,346.9 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.  இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது   75.7 சதவீதம் அதிகமாகும். விரிவடைந்து […]

பொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் விஜய்?? எந்தளவுக்கு உண்மை?

  • June 12, 2023
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், வில்லனாக கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமாரும் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், புஷ்பா பட வில்லன் சுனில், யோகிபாபு, நடிகை […]

இலங்கை

கொழும்பை சுற்றிவளைத்த பொலிஸார்! சிக்கிய நபர்கள்

  • June 12, 2023
  • 0 Comments

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (11) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்களும், 03 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களும், 03 கிராம் 35 மில்லிகிராம் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும், 91 கஞ்சா […]

செய்தி தமிழ்நாடு

பாஜக மாவட்ட செயலாளர் கைது

  • June 12, 2023
  • 0 Comments

இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழக தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் கைது. வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. கைது செய்யப்பட்ட செல்வம் புழல் சிறையில் அடைப்பு.

ராசிபலன்

வைகாசி ராசி வையகத்தை நேசி

  • June 12, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிராக இருப்பவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வேள்வி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். அஸ்வினி : மாற்றமான நாள். பரணி […]

Skip to content