கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 19ம் திகதி திருவிழா ஆரம்பமாகி ஜூலை 3ம் திகதி மகா உற்சவம் நடைபெற்று, மறுநாள் மாணிக்க கங்கையில் நீர் வெட்டப்பட்ட பின்னர் நிறைவடையும். இதேவேளை, திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை தங்க வைப்பதற்காக மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை […]