உலகம்

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா!

  • June 13, 2023
  • 0 Comments

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து செயற்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது குறித்த அமைப்பிலிருந்து விலகியுள்ளது. இந்நிலையில், யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியது. இதற்கிடையே சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கும் மறைமுகப்போட்டித் தன்மையும் அமெரிக்க மீண்டும் இணைவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் […]

இலங்கை

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை!

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு 11,293 ஆசிரியர்கள் தேவை. ஆனால் தற்போது 6,677 பேரே அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்ய இளங்கசிங்க தெரிவித்தார்.

இலங்கை

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த வருமானத்தை பெறமுடியாது : சுங்க அதிகாரிகள் தெரிவிப்பு!

  • June 13, 2023
  • 0 Comments

வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும்  கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதாகவும்  […]

செய்தி தமிழ்நாடு

ஏழை மக்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

  • June 13, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.கே.இளங்கோவன் என்பவர் தனது பிறந்த நாளை ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடியுள்ளார். பட்டாபிராமில் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இலவசமாக செல்ல நவீன வசதிகள் கொண்ட 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியுள்ளார். இந்த 2 ஆம்புலன்ஸ்களும் இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது. இதனை புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி துவக்கி வைத்தார். […]

இந்தியா

காவல் நியத்திற்கு சூட்கேசுடன் வந்த பெண்… பொலிஸாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • June 13, 2023
  • 0 Comments

பெங்களூருவில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் அடைத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த மகளால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் செனாலி சென். இவர் பெங்களூருவில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு இரவு ஒரு சூட்கேசுடன் வந்தார்.அப்போது, பொலிஸார் நீங்கள் யார் என்று கேட்டதற்கு செலிமா சென் எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து வந்த காவலர்களிடம் அப்பெண், கையில் கொண்டு வந்த சூட்கேசை […]

இலங்கை

7 இலங்கையர்ககளை வலை வீசி தேடி வரும் இன்டர்போல்

  • June 13, 2023
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் சமீபத்திய சிவப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.   ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் , மற்ற மூன்று இலங்கையர்கள் பிற நாடுகளில் செய்த குற்றங்கள் தொடர்பாக அந்நாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு அறிவிப்பில் தேடப்படுபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகம்

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் காயம்!

  • June 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கொலராடோ டென்வரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், தாக்குதலை மேற்கொண்ட நபரும் சுடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டென்வர் நகர் கூடைப்பந்தாட்ட அணியினர் தங்களது முதலாவது என்பிஏ கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற பகுதிக்கு அருகில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்து மூன்று மணிநேரத்தின் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால்,  பலர் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

உக்ரைனுக்காக உளவுபார்த்த ரஷ்ய பாதுகாப்பு குழுவினர் கைது!

  • June 13, 2023
  • 0 Comments

உக்ரைனுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் குழுவை,  ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விமானப்படைக்கான ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஆவணங்களை பெயர் தெரியாத நபர்கள் உளவு பார்த்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இதே குழு ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கொரோட் பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் 4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் வெடிபொருட்கள், நான்கு டெட்டனேட்டர்கள், […]

புகைப்பட தொகுப்பு

நம்ம வெண்ணிலாவா இப்படி? எல்லை மீறும் சீரியல் நடிகையின் போட்டோ ஷூட்

  • June 13, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரியங்கா குமார். கர்நாடகாவை சேர்ந்த இவர் அங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். /*! elementor – v3.13.3 – 28-05-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} View this post on Instagram A post shared by P R I Y A N K A K U M A R (@priyankaa_7)

உலகம்

லண்டனில் யாழ்ப்பாண தமிழர் மூவருக்கு நேர்ந்த சோகம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் கடந்த  10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இவ்விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து அவர்கள் கனடாவில் இருந்து பிரித்தானியாவுக்கு உறவினரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த வேளையில் இடம்பெற்றுள்ளதா தெரியவருகிறது. இரண்டு கார்கள் மோதியத்தி விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் […]

Skip to content