உலகம்

உலகளாவிய ரீதியில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 14, 2023
  • 0 Comments

கடந்த இருபது வருடங்களில் முதன்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 160 மில்லியன் சிறுவர்கள்,  தொழிலாளியாக இருப்பதாக,  சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக 80 மில்லியன் சிறார்கள் உடல் மற்றும் உள ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த அமைப்பு  கவலை வெளியிட்டுள்ளது. வறுமையின் பொருட்டு சிறார்கள் வேலைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான வழி வயது வந்தவர்கள் தொழில்புரிவது மட்டுமே என்று தெரிவித்துள்ள […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொள்ளையடித்த நபர்கள்

  • June 14, 2023
  • 0 Comments

பிரித்தானிய நகரமொன்றில், பட்டப்பகலில் கொள்ளையர்கள் சிலர் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள Leeds நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில், சற்றும் பயமில்லாமல் சில முகமூடிக் கொள்ளையர்கள் நகைக்கடை ஒன்றை கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இரவில் யாருக்கும் தெரியாமல் திருடியதெல்லாம் போய், இப்போது பட்டப்பகலிலேயே திருடத் துவங்கியுள்ளார்கள் திருடர்கள். அதுவும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள தெரு ஒன்றில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடி நிற்க, கார் ஒன்றில் […]

பொழுதுபோக்கு

சரத்குமாரின் அடுத்த அவதாரம்! 150வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சரத்குமார் 80 மற்றும் 90 களில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர். 2000-களில், அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியடைந்த பிறகு, கௌரவ தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்த போர் தொழில் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தவிர சுமார் 15 படங்கள் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் சரத்குமாரின் 150வது படமான தி ஸ்மைல் மேன் படப்பிடிப்பு நிறைவு […]

ஐரோப்பா

ரஷ்யாவில் குற்றவாளிகளை இராணுவத்தில் சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல்!

  • June 14, 2023
  • 0 Comments

ரஷ்ய ராணுவத்தில் குற்றவாளிகள் சேர அனுமதிக்கும் திட்டம் ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டேட் டுமாவின் கூற்றுப்படி, ஒரு குற்றத்தைச் செய்ததற்காக விசாரிக்கப்படும் ஒருவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேரலாம் எனத் தெிரவிக்கப்படுகிறது. இவ்வாறு இராணுவத்தில் சேருபவர்களின் ஒப்பந்தம் முடிந்தவுடன், அல்லது அவர்கள் போர் விருதுகளை பெற்றால், குற்றவியலில் இருந்து விலக்களிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

Warner Bros நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஹாரிப்பாட்டர் உலகை பிரதிபலிக்கும் பிரமாண்ட ஸ்டூடியோ

  • June 14, 2023
  • 0 Comments

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் மாஜால உலகத்தை மெய்பிப்பதைபோல் ஜப்பானில் பிரமாண்ட ஸ்டூடியோவை வார்னர் புரோஸ் என்ற நிறுவனம் அமைத்துள்ளது லண்டனில் பத்து ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஸ்டியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. அதையடுத்து மேம்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை டோக்கியோவில் அமைத்துள்ளது. ஆசிய அளவில் ஹாரி பாட்டர் ரசிகர்களை கவரும் விதமான இந்த ஸ்டூடியோ வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு டிக்கட்டின் விலை இலங்கை மதிப்பில் 14440ரூபாவிற்கு விற்கப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து […]

இந்தியா

4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை!

  • June 14, 2023
  • 0 Comments

பீகாரில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம், சாப்ராவில் உள்ள சஞ்சீவானி முதியோர் இல்லத்தில் நேற்று பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கு பெண் குழந்தையொன்று பிறந்தது.நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு காதுகளுடன் பிறந்த அக்குழந்தையை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.ஆனால் ஒரே ஒரு முதுகு தண்டு மற்றும் ஒரு தலை மட்டுமே இருந்தது. இக்குழந்தை குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் […]

இலங்கை

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்!

  • June 14, 2023
  • 0 Comments

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார். புதிய வேலைத்திட்டத்தின் கீழ்  விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்  […]

இலங்கை

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி: கோபா குழு தெரிவிப்பு

நாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக சிறைகளில் 259 சதவீதம் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 17,502 கைதிகள் விளக்கமறியலில் உள்ளதாகவும், 9,289 கைதிகள் தண்டனை பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். எவ்வாறாயினும், நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட […]

உலகம் ஐரோப்பா

கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய மீன்பிடிப் படகு : 78 பேர் உயிரிழப்பு!

  • June 14, 2023
  • 0 Comments

தெற்கு கிரீஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானவர்கள் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த படகில் இருந்து 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிழைத்தவர்களில், நான்கு பேர்  தாழ்வெப்பநிலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் […]

உலகம்

உக்ரைனில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி

ரஷ்யப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . உக்ரைனுக்கு எதிரான 15-மாத கால போரில் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக உக்ரைனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். “ஏழு வீடுகளின் […]