இலங்கை செய்தி

வடமாகாண ஆளுநருக்கு எதிரான விசாரணை மே மாதத்தில் எடுத்துகொள்ளப்படும் என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக வட […]

இலங்கை செய்தி

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர். இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் […]

இலங்கை செய்தி

900 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்!

  • April 11, 2023
  • 0 Comments

00 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் நெப்டியூன் என்ற அதிசொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளது. இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைக்க அரசாங்கம் தயாரில்லை என்கிறார் சாகல ரத்நாயக்க

  • April 11, 2023
  • 0 Comments

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு  தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க  தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு  அமைச்சரவை பத்திரத்திற்கமைய  சிவில் பாதுகாப்பு சேவை,   (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம்  நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு  60 வருட  சேவைக்காலத்தை பூர்த்தி  செய்வதற்கு,  55 வருடங்களில்  சேவைக்கால நீடிப்பைக் கோர […]

செய்தி வட அமெரிக்கா

ரஷ்ய -உக்ரைன் போரை என்னால் மட்டுமே நிறுத்த முடியும் – டிரம்ப் அதிரடி பேச்சு

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணியிடம் அத்துமீறல் : ஒருவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப்பயணியின் முறைப்பாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு தான் சென்றவேளை இந்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை செய்தி

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

  • April 11, 2023
  • 0 Comments

தொழில் காரணமாக வெளிநாட்டிற்கு  செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுய பதிவை அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் – பாதுகாப்பு தடுப்பு பலகையில் சிக்கி பலி

  • April 11, 2023
  • 0 Comments

ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் படுக்கையைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மஸ்பன்ன, வெலேக்கடே வீடு ஒன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற 7 மாத பெண் குழந்தையே வீட்டின் கட்டிலில் இருந்து வீழ்ந்து, மர பாதுகாப்பு பலகையில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் வந்து பார்த்தபோது, ​​கட்டிலைச் […]

இலங்கை செய்தி

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சீரமைப்பு பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை நகர சபை அதிகாரப் பிரிவுகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் பணியிலிருந்து விலகிய 25,000 படையினர்

  • April 11, 2023
  • 0 Comments

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.