தெற்கு ஈரானில் நீதிபதி மீது கத்திக்குத்து தாக்குதல் ; தலைமறைவான தாக்குதல்தாரி
ஈரானில், நீதிபதியொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று (27) காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் அவரை கத்தியால் குத்தி விட்டு, தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்துவிட்டார். இந்த தாக்குதலுக்கு உடனடியாக ஒருவரும் பொறுப்பேற்கவில்லை. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என போலீஸ் […]