விளையாட்டு

ரசிகையின் முகத்தை பதம் பார்த்த பந்து – கதறி அழுதவரிடம் மன்னிப்பு கேட்ட சஞ்சு

  • November 17, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி நேற்று ஜோகார்னஸ்பேக்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் தான் போட்டியை ஆசையாகப் பார்க்க வந்த ரசிகை ஒருவரின் முகத்தில் சஞ்சு சாம்சன் விளாசிய சிக்ஸர் பந்து பயங்கர உள் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் இந்திய அணியின் இன்னிங்சின் போது 10-வது ஓவரை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசினார். […]

ஐரோப்பா செய்தி

அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர் – ஜெலன்ஸ்கி நம்பிக்கை

  • November 17, 2024
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ராஜதந்திர நடவடிக்கை மூலம் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வானொலி மூலம் உரை நிகழ்த்திய அவர், ரஷ்யா கைப்பற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் திருப்பப் பெறும்வரை அமைதியை நிலைநாட்ட முடியாது என்று கூறினார். டிரம்ப் நினைத்தால் போர் விரைவில் முடிவடையும் என்றும், தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், ரஷ்யா அங்கு முன்னேறி வருவதாகவும் ஜெலன்ஸ்கி […]

இலங்கை

அநுர அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவு – சஜித் அறிவிப்பு

  • November 17, 2024
  • 0 Comments

இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சிக்குத் தேவையான பலமும், மக்களின் கனவுகள் நனவாக்கும் ஆற்றலும் தற்போதைய அரசாங்கத்துக்கு குறைவில்லாமல் கிட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு நாடாக நாம் தற்போது எதிர்நோக்கி வரும் சிரமங்களை போக்கக்கூடிய வல்லமை தற்போதைய அரசாங்கத்துக்குக் கிட்டியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், தமது ஆட்சிக்காலத்தில் அவர்களது கொள்கைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்திக்குள்ள சவாலாகும். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகம் தொடர்பில் ரஷ்யா எடுத்த தீர்மானம்

  • November 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் ஊடாக ஐரோப்பாவுக்கான பழமையான எரிவாயு ஏற்றுமதி பாதை இந்த வருட இறுதியில் மூடப்படவுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தவுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான Gazprom நிறுவனத்துடனான விநியோக ஒப்பந்தத்தை நீடிக்க யுக்ரைன் மறுத்ததால் உக்ரைன் ஊடான ஏற்றுமதிப் பாதை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யா மீளவும் வலுசக்தியை ஆயுதமாக பயன்படுத்துவதாக யுக்ரேன் வௌிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆஸ்திரியா […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு – பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • November 17, 2024
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அமைதியை பேணுவதற்காக இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அடையாளங் காணப்பட்ட சில இடங்களில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 2 நாட்களுக்குள் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 18 வேட்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 147 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. […]

செய்தி

1,400 பழங்கால கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா

  • November 16, 2024
  • 0 Comments

84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பழங்காலப் பொருட்கள் கிமு 2000 முதல் கிபி […]

செய்தி

இலங்கை: கசிப்பு உற்பத்தி செய்த 21 வயது இளைஞன் கைது

  • November 16, 2024
  • 0 Comments

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ.கொஸ்தா அவர்களது தலைமையின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. […]

செய்தி

IPL Update – மெகா ஏலம் குறித்த முழு விவரம்

  • November 16, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட்டுக்கே உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 2024 IPL போட்டியில் கவுதம் கம்பீர் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் 2025 IPL தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. IPL 18வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான […]

செய்தி

பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் – 10 பேர் மரணம்

  • November 16, 2024
  • 0 Comments

காசா நகரின் ஷாதி அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பள்ளியின் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் உள்ள ஐநா நடத்தும் அபு அஸ்ஸி பள்ளியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களால் என்கிளேவ் முழுவதும் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.

செய்தி

5 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா புறப்பட்ட பிரதமர் மோடி

  • November 16, 2024
  • 0 Comments

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய கூட்டாளி நாடான நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். […]