ரஷ்ய-உக்ரைனை அடுத்து வெடிக்கவுள்ள இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை
தைவான் மீதான சீனாவின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் நிலையில் தற்போது அமெரிக்கா இல்லை என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் தீவை எந்த விலை கொடுத்தும் தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காத்திருக்கிறார். மட்டுமின்றி, ராணுவத்தை அனுப்பியேனும் தமது கனவை நிறைவேற்ற அவர் தயாராகி வரும் நிலையில், உக்ரைன் போருக்கு அடுத்து தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் பீதியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் தான், சீனாவுக்கு […]