டெக்சாஸில் மூளையை தின்னும் அமீபா : 5 நாட்களில் மரணம்!
டெக்சாஸில் 71 வயது மூதாட்டி ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழாய் தண்ணீரை பயன்படுத்தி மூக்கில் உள்ள அழுக்கை வெளியேற்ற முயன்றபோது, அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “71 வயது மூதாட்டி கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனைக்கு வந்தார். நாங்கள் முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர். அவர் மூளையை உண்ணும் அமீபா […]