உச்சக்கட்ட பதற்றங்களுக்கு மத்தியில், நோர்வே சென்ற உலகின் மிகப் பெரிய போர் கப்பல்!
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS Gerald R. Ford, இன்று (24) ஒஸ்லோவிற்கு சென்றுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் குறித்த கப்பலின் விஜயமானது மேலும் மோதலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கப்பலும் அதன் பணியாளர்களும் எதிர்வரும் நாட்களில் நோர்வே ஆயுதப்படைகளுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்தப் பயணம் அமெரிக்காவிற்கும் நார்வேக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவின் முக்கிய சமிக்ஞையாகும். மேலும் […]