ஐரோப்பா

உலகளாவிய ரீதியில் வீழ்ச்சியடையும் எரிசக்தி விலை : பிரித்தானிய மக்களுக்கு கூறப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

  • May 25, 2023
  • 0 Comments

உலகளாவிய மொத்த எரிசக்தி விலைகள் வீழ்ச்சியடைவதால், ஜூலை மாதம் முதல் வழக்கமான வீட்டு எரிசக்தி கட்டணம் ஆண்டுக்கு 400 பவுண்டுகள் ($495) குறையும் என்று பிரிட்டனின் எரிசக்தி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். கடந்த 18 மாதங்களில் கடுமையாக உயர்ந்த மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களைச் சமாளிக்க போராடிய மில்லியன் கணக்கான மக்களுக்கு இது மகிழச்சியான செய்தியாக அமைந்துள்ளது. எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம்,  அதன் விலை வரம்பைக் குறைப்பதாகக் கூறியுள்ளது. இதனால் எரிவாயு சப்ளையர்கள் ஒரு யூனிட் […]

இலங்கை ஐரோப்பா

போலி விசாவில் பிரித்தானியாவுக்குச் சென்ற இலங்கையர்களின் நிலை – வெளியாகும் பரபரப்பு செய்தி

  • May 25, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு போலி வீசா மூலம் சென்றவர்கள் தொடர்பாக பிரித்தானிய சர்வதேச ஊடகம் ஒன்று பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறது. தகுதி அற்றவர்கள் ஸ்கில்ட் வார்கேர் வீசா மூலம் போலியாக அழைத்து வரப்பட்டார்கள் என்று தெரிவிக்கின்றது. இது தொடர்பான தகவலை கீழே காணலாம்….. ராதா…. image credits sky news  ஆட்சேர்ப்பு “ஏஜெண்ட்” என்று அவர் நம்பிய ஒருவரிடம் இலங்கையைச் சேர்ந்த அரிசி விவசாயியான ராதா, இங்கிலாந்திற்குச் செல்வதற்காக 50,000 பவுண்டுகள் செலுத்தி, அவரது குடும்ப […]

இலங்கை

ஐ.எம்.எஃப் குறித்து கவனம் செலுத்தும் ஜப்பான்!

  • May 25, 2023
  • 0 Comments

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அந்நாட்டு நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகியை சந்தித்தார். அந்தச் சந்திப்பில்இ இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைஇ சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசியா

சிங்கப்பூர்-மதுரை நேரடி விமான சேவை – மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை

  • May 25, 2023
  • 0 Comments

முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அவருக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடிய நிலையில், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி சண்முகம் கோரிக்கை விடுத்தார். […]

ஐரோப்பா

கொள்ளையடிக்கப்பட்ட மன்னரின் வாள் லண்டனில் 529 கோடிக்கு விற்பனை

  • May 25, 2023
  • 0 Comments

செவ்வாய்க்கிழமை (மே 23) ஆண்டு லண்டனில் நடந்த போன்ஹாம்ஸ் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை விற்பனையில் திப்பு சுல்தானின் வாள் 17.4 மில்லியன் டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் ரூபா 529.03கோடி) விற்கப்பட்டது. திப்பு சுல்தான் 1782-1799க்கு இடையில் தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியத்தின் இந்திய முஸ்லீம் மன்னராக இருந்தார். அவர் பொதுவாக “மைசூர் புலி” என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் அவர் தனது போர் கட்டளைபகளுக்கு பிரபலமானவர். 1799ம் ஆண்டு மே 4ம் திகதி திப்பு சுல்தானின் அரண்மனை செரிங்காபட்டத்தில் […]

வட அமெரிக்கா

கனடாவில் வாடகை வீடுகளுக்கு பணம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை…

  • May 25, 2023
  • 0 Comments

டொரன்டோவில் வீடுகளை வாடகைக்கு வழங்குவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளர் போன்று தோன்றி வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி குறித்த நபர் பலரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.டொரன்டோ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முகநூல் ஊடாக விளம்பரம் செய்து கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் குறித்த நபர் பலரை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீட்டை வாடகைக்கு வழங்குவதற்காக முற்பணமாக பணம் பெற்றுக் கொண்டு இந்த நபர் […]

உலகம்

அமெரிக்காவில் கடும் சூறாவளி : இருவர் உயிரிழப்பு!

  • May 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும்,  இடி  மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு ஒன்று சரிந்து விழுந்து தரைமட்டமானது. குறித்த வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த நிலையில், அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதில்  இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும்  படுகாயங்களுடன்  மீட்கப்பட்ட […]

இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 25, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1150 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத்யாப்பா குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 552 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்க […]

பொழுதுபோக்கு

குடித்து விட்டு குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா! கொளுத்தி விட்ட பயில்வான்

  • May 25, 2023
  • 0 Comments

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பற்றி அவதூறான வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் மதுவுக்கு அடிமையாகி இருப்பதை பற்றி சர்ச்சையாக பேசியிருக்கிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவையாகவும் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்திருந்தனர். இருவரின் நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் பயில்வான் யூடியூப் சேனல் […]

இலங்கை

மலேஷியாவிற்கு தொழிலுக்காக சென்ற பெண் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு!

  • May 25, 2023
  • 0 Comments

சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று அங்கு தொழில் புரிந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொபேகனில் வசித்து வந்த 44 வயதுடைய திருமணமான ரேணுகா நிலாந்தி பண்டார என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜா-எல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் அவர் சுற்றுலா விசாவில் மலேஷியா சென்றுள்மை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்த […]