பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் ஒருவர் பலி!
பிரபல யூடிபர் இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான் சென்னையை சேர்ந்தவர். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய யூடியூப் செனலில் 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சென்றபோது இவருடைய கார் விபத்தில் சிக்கியதாக கூறுப்படுகிறது. […]