இந்தியாவில் தீயிலிருந்து தப்ப எட்டாவது மாடியிலிருந்து குதித்த தந்தை, இரு குழந்தைகள் மரணம்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை தீப்பிடித்தது. அக்கட்டடத்தின் எட்டாவது மாடியில் வசித்து வந்த ஒரு குடும்பம், தீயிலிருந்து தப்பிப்பதற்காக மேலிருந்து குதித்தது.அதில், யாஷ் யாதவ், 35, என்ற நபரும் அவருடைய பத்து வயது மகனும் மகளும் உயிரிழந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். யாதவின் மனைவியும் அவருடைய மூத்த மகனும் உயிர்பிழைத்தனர். தீயின் பிடியிலிருந்து தப்பிய அவர்கள் இருவரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]