மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஐந்து ரூபாய் டாக்டர் பெயர் சூட்ட வேண்டும்
வடசென்னையில் ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்டவலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஜெய்ஹரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் ஏராளமான குழந்தைகளும் அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் முகக்கவசத்துடன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஜெய்ஹரி, தங்கசாலையோடு முடிய இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தை […]