இலங்கையில் அதிரடியாக தடை செய்யப்பட்ட 8 நிறுவனங்கள்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது. அத்துடன் நிதி நிறுவனங்கள் பிரமிட் திட்டத்தில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.