இலங்கை

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

  • May 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

ChatGPT ஆல் அமெரிக்க சட்டத்தரணிக்கு ஏற்பட்ட சோதனை

  • May 28, 2023
  • 0 Comments

நியூயார்க் வழக்கறிஞர் ஒருவர் தனது சட்ட ஆராய்ச்சிற்கு AI கருவியான ChatGPT ஐப்  பயன்படுத்தியமையால், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். நபர் ஒருவர் விமானம் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கை முன்கொண்டு நடத்துவதற்காக சில முன்னோடி வழக்குகளை உதாரணமாக முன்வைப்பதற்கு வழக்கறிஞர் ChatGPT ஐப் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவ்வாறாக குறிப்பிடப்பட்ட முன்னோடி வழக்குகளை  தங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என விமான நிறுவனம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதனையடுத்து முன்னோடி வழக்குகள் குறித்து விவரிக்க […]

இந்தியா

டெல்லியில் அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு!

  • May 28, 2023
  • 0 Comments

டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பாராளுமன்ற கட்டிட கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்ததுடன்  மக்களவையில் செங்கோலை நிறுவினார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது,  சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும் திட்டமிட்டபடி திறப்பு விழா நடக்கிறது. இது ஒருபுறமிருக்க  போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து […]

பொழுதுபோக்கு

புதிய பாராளுமன்றத்தை அழகிய வீடு என்றார் ஷாருக்கான்!! மோடி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

  • May 28, 2023
  • 0 Comments

இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தொகுதி இன்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்ததும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை, பூஜை செய்து ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர். அந்த செங்கோலை கையில் ஏந்தியபடி நடந்து சென்ற பிரதமர் மோடி, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் அதனை நிறுவினார். இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டார். அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து பிரபலங்கள் பலரும் பேசி உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் […]

தமிழ்நாடு

இறந்த குழந்தையின் உடலை 10km தூக்கி சென்ற பெற்றோர்!

  • May 28, 2023
  • 0 Comments

தமிழகத்தில் இறந்த குழந்தையின் சடலத்தை 10km, பெற்றோர் கண்ணீரோடு தூக்கி சென்ற சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட, அத்திமரத்து கொல்லை கிராமத்தில், விஜி- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்காவை, உறங்கி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். அவர்கள் ஊரிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதை […]

இலங்கை

சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கியுள்ள 6 மாணவர்கள் கைது!

  • May 28, 2023
  • 0 Comments

கேகாலை,  அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நீர்த்திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய் தீப்பிடித்து எரிந்திருந்தது. இந்த தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்படிஇ நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் […]

ஐரோப்பா

ஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 28, 2023
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை மேற்கொண்ட ரஸ்யாவின் 50க்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்யா மேற்கொண்ட தொடர்ச்சியா டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தலைநகரை நோக்கிவந்துகொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ள கீவ்வின் மேயர் மேலும் பல ஆளில்லா விமானங்கள் தலைநகர் நோக்கி வருகின்றன என எச்சரித்துள்ளார். ரஸ்யா ஈரானில் தயாரிக்கப்பட்ட 54 சஹெட்ஆளில்லா விமானங்களை அனுப்பியது அவற்றில் 52 ஆளில்லா விமானங்களை வீழ்த்தியுள்ளோம் […]

ஐரோப்பா

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; அதிபர் புதின் உத்தரவு

  • May 28, 2023
  • 0 Comments

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன மீது ரஷ்ய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. […]

பொழுதுபோக்கு

“வாழ்நாள் சாதனையாளர்” விருதைப் பெற்றார் கமல்! கொடுத்தது யார் தெரியுமா?

  • May 28, 2023
  • 0 Comments

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்தவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து, தான் ஒரு பன்முகத்திறமை கொண்டவர் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – சிறுமியின் உயிரை பறித்த சமூக ஊடகச் சவால்

  • May 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத்தில் பிரபலமாகிவந்த chroming சவாலைச் செய்த 13 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மெல்பர்ன் (Melbourne) நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உலோகச் சாயங்கள், பெட்ரோல் முதலிய ஆபத்தான ரசாயனங்களை நுகர்வதுதான் அந்தச் சவாலாகும்.. அதைச் செய்துபார்க்கும் முயற்சியில் இறங்கிய எஸ்ரா ஹெய்ன்ஸ் (Esra Haynes) எனும் சிறுமி ‘spray’ வாசனைத் திரவியத்தை நுகர்ந்ததாக தெரியவந்துள்ளது. அந்தச் சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்ததாகச் சிறுமியின் தந்தை தெரிவித்தார். chromingசவாலுக்குப் பிறகு சிறுமி சுயநினைவை இழந்தார். […]