இலங்கை செய்தி

டொலர் நெருக்கடிக்கு தீர்வு : மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க தேவையான துறைகளுக்கு செலவிடுவதற்கு போதுமான  அளவு டொலர் எம் வசம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாளை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியளிக்கும் என கருதப்படும் இலங்கைக்கான நிதி உதவி கிடைத்த பின்னர் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் இதன் காரணமாக மேலும் நிதியும் முதலீடும் […]

இலங்கை செய்தி

2.9 பில்லியன் கடன் இலங்கைக்கு கிடைக்குமா : முடிவை அறிவிக்கும் சர்வதேச நாணய நிதியம்!

  • April 11, 2023
  • 0 Comments

கடன் மறுசீரமைப்புக்கான எழுத்து மூல உத்தரவாதத்தை அனைத்து தரப்புகளும் வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கான  உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் வழங்க உள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு  மார்ச்  மாதம் நடுப்பகுதியில்  தீர்மானித்தது. அதன் பின் நாட்டில் அந்நியச் […]

இலங்கை செய்தி

மகளிடம் 6 வருடமாக மோசமான செயலில் ஈடுபட்டுவந்த தந்தை மற்றும் நண்பர் -இலங்கையில் நடந்தேறிய சம்பவம்

  • April 11, 2023
  • 0 Comments

தன் சொந்த மகளை 10 வயது முதல் இருந்தே தொடர்ச்சியாக 6 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும் அவரது நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த கைது நடவடிக்கை நேற்று கருவலகஸ்வெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தந்தையால் மகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக நண்பர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையில் இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.பாதிக்கப்பட்ட சிறுமியான மகளுக்கு தற்போது 16 வயது எனவும், புத்தளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார் […]

இலங்கை செய்தி

இலங்கையில் உள்ள சொக்லைட் விரும்பிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சொக்லைட்டுக்கள் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சொக்லைட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சொக்லைட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவ்வாறான சொக்லைட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக […]

இலங்கை செய்தி

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீர் கோளாறு – மின் தடை ஏற்படும் அபாயம்?

  • April 11, 2023
  • 0 Comments

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மூன்றாம் இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த பழுதால் மின்வெட்டு […]

இலங்கை செய்தி

கொழும்பில் அதிர்ச்சி – மனைவியுடன் ஏற்பட்ட தகராறு – வீட்டை எரித்த கணவன்

  • April 11, 2023
  • 0 Comments

மொரட்டுவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, ​​கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்தடுத்து பதிவான இரண்டு நிலநடுக்கங்கள்

  • April 11, 2023
  • 0 Comments

கிரிந்த பகுதியில் நேற்று மாலை சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் 3 பெண்கள் கழுத்து நெரித்து படுகொலை -சிக்கிய நபர்

  • April 11, 2023
  • 0 Comments

ல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபர் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் […]

இலங்கை செய்தி

யாழில் 14 வயது சிறுமியை குடும்பம் நடத்த அழைத்து சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • April 11, 2023
  • 0 Comments

யாழப்பாணம் – மல்லாகம் பகுதியச் சேர்ந்த பாடசாலைக்குச் செல்லும் 14 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து குடும்பம் நடத்த அழைத்து சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த  20 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 14 வயது சிறுமி பாடசாலைக்கு செல்ல முற்பட்ட போது சிறுமியை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்கு பகுதிக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸில் சிறுமியின் பெற்றோரினால் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா – மருத்துவர் விடுக்கும் எச்சரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்று, உணவு மற்றும் நீரின் ஊடாக பரவக்கூடிய ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், லிஸ்டீரியா பக்றீரியா தொற்று அறிகுறியுடைய சந்தேகத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். […]

You cannot copy content of this page

Skip to content