இலங்கை

இலங்கையில் காலணி மற்றும் பைகளின் விலைகளில் மாற்றம்!

  • May 24, 2023
  • 0 Comments

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணி மற்றும் பைகள் ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினை தொடர்ந்து காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது. இதனால் காலணிகள் மற்றும் பைகளின் விலை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விக்ரமுக்கு உதவிய அஜித்குமார்!! பல வருடங்கள் கழித்து வைரலாகும் சம்பவம்

  • May 24, 2023
  • 0 Comments

நடிகர் விக்ரமுக்கு அஜித்குமார் உதவிய சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத நிலையில் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தது வந்தார். பின்னர் பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார். சேது மிகப்பெரிய வெற்றிப்படமானது. படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

  • May 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலையிடங்களில் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடப்புக்கு வந்த நிலையில் அந்த நடைமுறை காலம் மே 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. ஆனாலும் கூட சில நிபந்தனை தேவைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிலையான வேலையிட உயர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை உருவாக்க புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வேலையிடங்களில் […]

செய்தி தமிழ்நாடு

குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • May 24, 2023
  • 0 Comments

ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 2ஆவது தளத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு லோக்நாத்/17 என்ற மகன் உள்ளார். இவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு, 11ஆம் வகுப்பில் சேர இருந்தார்.இந்த நிலையில் இன்று லோக்நாத் வீட்டு குடும்பத்தில் […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – வைத்தியரை கொலை செய்த யாசகர்

  • May 24, 2023
  • 0 Comments

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை […]

வாழ்வியல்

சரும அழகை மெருகூட்டும் தேன்..!

  • May 24, 2023
  • 0 Comments

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேனின் பயன்கள். தேனை பொறுத்தவரையில், அதனை முழுமையான நன்மைகள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில் சரும அழகை மெருகூட்டும் தேனின் நன்மைகள் குறித்து பார்ப்போம். நமது சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சருமத்தின் வறட்சியைக் குறைத்தல், முகத்தில் உள்ள பருக்கள், பருக்களை சுத்தம் செய்தல், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருப்பது போன்றவை தேனின் முக்கியப் பண்புகளாகும். தேன் தேனீக்களால் […]

ராசியோ ராசி

  • May 24, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்‌. அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும். பரணி : சாதகமான நாள். […]

இலங்கை

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை – உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

  • May 24, 2023
  • 0 Comments

இலங்கையர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இதனை வலியுறுத்துகின்றார். தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால், 02 நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சில நோயாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக வைத்தியரைப் பார்க்காமல், தமது சொந்த அல்லது தமது குடும்ப உறுப்பினர்களின் கருத்திற்கு […]

அறிந்திருக்க வேண்டியவை

அர்த்தமற்ற கோபத்தால் காத்திருக்கும் ஆபத்து பற்றி தெரியுமா?

  • May 24, 2023
  • 0 Comments

மனிதன் தன் வாழ்க்கையில் பல உணர்வுகளினால் பயணிக்கின்றான். அதில் கோபம் என்பது பொதுவான உணர்வாகும். இது மனித வாழ்க்கையில் சாதாரணமாக வெளிப்படும் ஆரோக்கியமான உணர்வு. கோபம் என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே வரும் அவன் உள்ளுணர்வு ஆகும். ஒருவருக்கு கோபம் ஏற்படும்போது அந்த சமயமே அதனை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போதே வெளிப்படுத்தினால் நல்லது. அவற்றை கட்டுப்படுத்தினால் அவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் கோபம் என்பது குடும்பங்களில் மற்றும் வேலைபார்க்கும் இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளினால் மன அழுத்தம், நிதி […]

வட அமெரிக்கா

மூழ்கும் அபாயத்தில் நியூயோர்க் நகரம் -ஆய்வில் தகவல்!

  • May 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வானுயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எர்த் ‘ஸ் ஃப்யூச்சர் என்ற இதழில் இதுகுறித்த ஆய்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. அவை, தோராயமாக 1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன. இவற்றின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 1 முதல் 2 மில்லிமீட்டர் அளவு நியூயார்க் […]