இலங்கை செய்தி

விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு மகிழச்சியான செய்தி!

  • April 12, 2023
  • 0 Comments

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மதிப்பீட்டாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவாக செலுத்துவதற்கும் போக்குவரத்து கொடுப்பனவாக 2 ஆயிரத்தி 900 ரூபா செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கையளவிலான தீர்மானத்தின் பிரகாரம் […]

செய்தி

ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ள போதிலும், ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ள போதிலும், தங்கத்தின் விலையில், எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது சர்வதேச நிதிநெருக்கடியில் அமெரிக்காவும் சிக்கியுள்ளதால், அந்நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் சில வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன்காரணமாகவே தங்கத்தின் விலை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளமைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய நிலைவரப்படி, இலங்கையில் 24 கரெட் பவுண் ஒன்று 1 இலட்சத்து 82 […]

இலங்கை செய்தி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தில் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள் வழக்கு தொடுக்க தீர்மானம்

  • April 12, 2023
  • 0 Comments

021ஆம் ஆண்டு இந்நாட்டின் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எஞ்சியுள்ள பாகங்களுக்கு அருகில் சென்று ஆய்வு செய்து இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கான மாதிரிகளைப் பெற்றுக் கொள்ள நிபுணத்துவக் குழுவுக்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (நாரா) ஆகியவற்றுக்கு அறிவித்தார். சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் […]

இலங்கை செய்தி

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின்  அபிவிருத்தி கொள்கை  செயற்பாட்டுத் திட்டத்தின்  முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இலங்கையின்  அபிவிருத்தி  கொள்கை செயற்பாட்டுத்   திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன்  இடம்பெற்ற    இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்  சிரேஷ்ட  ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில்  இன்று  (06)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே   உலக வங்கி பிரதிநிதிகள்  மேற்கண்டவாறு   பாராட்டு தெரிவித்திருந்தனர். பாராளுமன்ற  வரவு செலவு திட்ட அலுவலகத்தை (Parliamentary […]

இலங்கை செய்தி

இந்துக்களின் பாரம்பரியத்திற்கே ஆபத்து – மோடியிடம் வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகள்!

  • April 12, 2023
  • 0 Comments

லங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம் பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ள குறித்த கடிதத்தில், இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன், இந்து கலாச்சாரம் பாரம்பரியம், கோவில் ஆகியவற்றை குறிவைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் அதிகளவு மதிப்பிற்குரியதாக காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை […]

இலங்கை செய்தி

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிகள் அனைத்துக்கும் எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி முதல் GPS மூலம் கண்காணிக்கும் முறைமை பொருத்தப்படுவதுடன் அதன் பின்னர் தனியார் தாங்கிகளுக்கும் பொருத்தப்படும் என சக்தி மற்றும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார். அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டம், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகை காலங்களில் […]

இலங்கை செய்தி

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் வெளியானது புதிய வர்த்தமானி!

  • April 12, 2023
  • 0 Comments

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனூடாக, சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிப்பதும் மக்களுக்கான தெளிவூட்டலை மேம்படுத்துவதுமே இதன் நோக்க என கூறப்படுகின்றது.

இலங்கை செய்தி

வைத்தியர்களின் வெளியேற்றத்தினால் நெருக்கடிநிலையில் சுகாதாரத்துறை!

  • April 12, 2023
  • 0 Comments

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒன்பது வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஆறு மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நான்கு சிறுவர் வைத்திய நிபுணர்கள் வெளியேறியமையினால் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பெற்ற  சிறுவர் நோயாளர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர கருத்து தெரிவிக்கையில்,  ​​விசேட வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாகவும், மற்றுமொரு குழு வைத்தியர்கள் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – பிரமித்த பண்டார தென்னகோன்!

  • April 12, 2023
  • 0 Comments

பொருளாதார மேம்பாட்டுக்கும்  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க […]

இலங்கை செய்தி

பொதுமக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வழிவகுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் : முக்கியஸ்தர் எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியிருக்கின்ற நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை நலிந்தவர்கள், உழைக்கும் மக்கள்,  தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான […]

You cannot copy content of this page

Skip to content