இலங்கை செய்தி

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்!

  • April 12, 2023
  • 0 Comments

அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார் எனக் குறிப்பிட்டிருந்தன. எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது. 2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் […]

இலங்கை செய்தி

பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்

  • April 12, 2023
  • 0 Comments

தமிழ்  – சிங்களப் புத்தாண்டு  காலத்தில் பொது மக்களுக்கு  பாதிப்பு  ஏற்படாதவாறு  வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்  சிரேஷ்ட  ஆலோசகரும்  ஜனாதிபதி  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க  தெரிவித்தார். கொழும்புத்துறை  வியாபாரச்  சங்கம்  மற்றும்  நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன்  நேற்று  (06)   ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்ற  சந்திப்பொன்றின் போது சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு  தெரிவித்தார். இதன்போது   நடைபாதை வியாபாரிகளுடன்  சுமூகமாக கலந்துரையாடிய […]

இலங்கை செய்தி

அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்

  • April 12, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  அரச சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார் சனத் ஜெயந்த தலைமையிலான இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திருமதி சித்தி  மரீனா மொஹமட், திரு நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமரன் ,திரு. மானிக்க படதுருகே ரொஹன புஷ்பகுமார, கலாநிதி . அங்கம்பொதி தமித நந்தனி […]

இலங்கை செய்தி

தீவிர பாதுகாப்பில் இலங்கை – தயார் நிலையில் படையினர்

  • April 12, 2023
  • 0 Comments

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தை பொறுத்த வரையில் இரண்டு விடயங்களில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. முதலாவது ஈஸ்டர் வாரமாகும். இன்று புனித வெள்ளி தினமாகும். கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்கள் முக்கியமான நாட்களாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பினை […]

இலங்கை செய்தி

இலங்கையில் குறைந்த விலையில் தேனீர் வழங்கவில்லை என்றால் புகைப்படம் அனுப்புமாறு அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளேன் டீயின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக  சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களது சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி 100 ரூபாவாக […]

இலங்கை செய்தி

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சி கொடுத்த முதியவர்

  • April 12, 2023
  • 0 Comments

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  […]

இலங்கை செய்தி

ரணில் ஜனாதிபதியானது ஏன்? – மஹிந்த வெளியிட்ட தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

“ராஜபக்சக்களைப் பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் நாட்டை முன்னேற்றவே ஆட்சியைப் பொறுப்பேற்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடமையைத் திறம்படச் செய்கின்றார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அதன் பெறுபேறாக சர்வதேச […]

இலங்கை செய்தி

கொழும்பில் பலரிடம் மோசடி செய்த போலி வைத்தியர்

  • April 12, 2023
  • 0 Comments

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர் போல் வேடமணிந்து திரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ முகமூடி அணிந்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேக நபர் பலரிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடம் சிரிஞ்சை, வைத்தியர்கள் அணியும் சீருடை, வைத்தியர்கள் பயன்படுத்தும் பல்வேறு நோய்கள் தொடர்பான பல அச்சிடப்பட்ட புத்தகங்கள் இருந்தன. சந்தேக நபர் வைத்தியர் போல் வேடமணிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி […]

இலங்கை செய்தி

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

  • April 12, 2023
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் விலை குறைக்கப்பட்ட 12 அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக, மேலும் 03 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நாளை (07) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். […]

இலங்கை செய்தி

எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : 45 நாட்டகளுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால் இலங்கைக்கு ஆபத்து!

  • April 12, 2023
  • 0 Comments

எம்.வி. எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்கத் தவறினால் இலங்கை சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையொன்றிலேயே சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் சட்டத்திற்கமைய சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குள் அதாவது எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் இழப்பீடு கோரப்பட வேண்டும். தற்போதைய நிலைவரத்திற்கமைய  கடல் சூழலுக்கு […]

You cannot copy content of this page

Skip to content