இலங்கை செய்தி

இலங்கையில் வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கொலை நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை செய்தி

இலங்கை கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

  • April 12, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும். இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாகன சாரதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலத்தில் பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பிரதான நகரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையினால் அதனை நிவர்த்திப்பதற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டமையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் உள்ள குரங்குகளை கேட்டுகும் சீனா

  • April 12, 2023
  • 0 Comments

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது. முதற்கட்டமாக இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். லங்கையின் குரங்குகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் போது நடைமுறையில் உள்ள சட்ட நிலைமைகள் […]

இலங்கை செய்தி

தங்க நகையை கொள்ளையிட்ட பொலிஸ் சார்ஜன்ட் கைது

  • April 12, 2023
  • 0 Comments

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான முகாமைத்துவ அதிகாரி அணிந்திருந்த ஐயாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (11) காலை பேருந்தில் பணிக்கு வந்த பிரதம முகாமைத்துவ அதிகாரி, பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் சென்ற போது, ​​அருகில் இருந்த ஒருவர் திடீரென தாக்கி, கழுத்தில் இருந்த […]

இலங்கை செய்தி

இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர்களுக்கு விளக்கமறியல்

  • April 12, 2023
  • 0 Comments

கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் ஏறிய நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் பிரேமரத்ன திராணகம உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக ஏறிய நான்கு இலங்கையர்கள், பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இலங்கைக்கு […]

இலங்கை செய்தி

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

  • April 12, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 8000இல் இருந்து 4000 ஆக குறைப்பதற்கான யோசனை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஐவரடங்கிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யவும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குழு நியமிக்கப்பட்டது. இது தொடர்பான வர்த்தமானியை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் […]

இலங்கை செய்தி

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • April 12, 2023
  • 0 Comments

வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில்  அமுல்படுத்திய சுங்கவரிகளை படிப்படியாகக் குறைக்க  எதிர்பார்க்கப்படுகிறது என  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், தனியார் துறைக்கான கடன் ஓட்டத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர பணப்புழக்க உதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவத்திற்கு  குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வங்கி  விசேட ஏற்பாடுகள் சட்டம் வேகமாக  செயற்படுத்தப்பட்டு […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டம் தொடர்பில் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்ற விவாதம்

  • April 12, 2023
  • 0 Comments

ர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்கான  வாய்ப்பு  இதன்மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இலங்கையின்  தற்போதைய பொருதாதர நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் மற்றும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கம்!

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல் உட்பட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி,  13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் விளக்கினார். உண்மை மற்றும் நல்லிணக்க […]

You cannot copy content of this page

Skip to content