நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது – சந்திம வீரக்கொடி
நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிலையையிட்டு கவலையடைய வேண்டும்.ஒரு தரப்பினரின் நோக்கத்துக்கு அமைய செயற்படாத காரணத்தால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவே […]