ஐரோப்பா செய்தி

போரின் செலவுகளை ஈடுகட்ட வெளிநாட்டு இருப்புகளை விற்கும் ரஷ்யா!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46.4 வீதம் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரியில் 22.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையில் இருந்து வரி மற்றும் சுங்க வருவாய் ஜனவரியில் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மிகக் குறைந்த நிலைக்கு சரிந்துள்ளது. ஜனவரியில் 425.5 பில்லியன் ரூபிள் மற்றும் பிப்ரவரி 2022 இல் 971.7 பில்லியன் ரூபிள்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் எண்ணெய் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ஓட்டுநரில்லா மின்சார வாடகை கார் ஜெர்மனியில் அறிமுகம்

  • April 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியை சேர்ந்த வாடகை கார் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா மின்சார கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையை தொடங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் அந்த காரை வாடிக்கையாளர் தேவைப்படும் இடத்திற்கு இயக்கி இறங்கி கொள்ளலாம். காரில் பயணம் செய்யும் வாடிக்கையாளர் விரும்பிய இடத்தில் இறங்கியவுடன் மீண்டும் அந்த கார் ரிமோட் கொண்ட்ரோல் மூலம் தானாக திரும்பிவிடுகிறது. வே என்ற புத்தாக்க […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு சோலார் பெனல்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் ஆற்றல் பாதுகாப்பிற்கு ஏதுவான வகையில் சோலார் பேனல்களை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டர்லையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனின் ஆற்றல் பாதுகாப்பிற்கு முக்கியமான எரிசக்தி ஆதாரங்களில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளேன். 5700 சோலார் பேனல்களின் முதல் தொகுதி விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

சபோர்ஜியா பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் : ஐவர் உயிரிழப்பு,10 பேரை காணவில்லை!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான சபோர்ஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலியானர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ஏவுகணை தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலையில் மற்றொரு நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் எட்டுபேர் காயமடைந்துள்ளதுடன், 10 பேர் காணமல்போயுள்ளனர்.

ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் புடின் சந்திப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

உக்ரைனிய உளவுக் குழுவொன்று பிரையன்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று மொஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொண்டார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது பேசிய ஜனாதிபதி, பல்வேறு வசதிகளின் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு தனது உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு ரொக்கெட்டுக்களை வழங்கிய செர்பியா : விளக்கம் கேட்கும் ரஷ்யா!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் நட்பு நாடான செர்பியா, ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கியதாக வெளியான செய்திகளை தொடர்ந்து ரஷ்யா அதிகாரப்பூர்வ விளக்கத்தை கோரியுள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், செர்பிய அரசு ஆயுத தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் துருக்கி மற்றும் ஸ்லோவாக்கியா வழியாக உக்ரைனுக்கு 3500 ஏவுகணைகளை வழங்கியதாக தெரிவித்துள்ளது. செர்பிய பாதுகாப்பு மந்திரி மிலோஸ் வுசெவிக் இந்த தகவலை மறுத்துள்ளார். இருப்பினும் மூன்றாம் தரப்பின் ஊடகாக வழங்கப்பட்டிருக்கலாம் என அவர் கூறினார். இந்நிலையில் இது குறித்து ஆழ்ந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையத்தால் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • April 13, 2023
  • 0 Comments

  இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் பனி எச்சரிக்கை விடுத்துள்ளது. உறையவைக்கும் சீதோஷ்ணம் காரணமாக ஸ்கொட்லாந்திலும் இங்கிலாந்திலும் பல மில்லியன் பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம்.சாலை மற்றும் ரயில் சேவையும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை திங்கட்கிழமை வரை நீடிக்கலாம் […]

ஐரோப்பா செய்தி

எகிப்து பிரமிட்டில் மறைவான பாதை கண்டுப்பிடிப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

எகிப்து – கிசாவின் கிரேட் பிரமிட்டுக்குள் ஒன்பது மீட்டர் நீளமுள்ள மறைவான பாதை கண்டுப்பிடிக்கப்ப்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் அகமது இசா தெரிவித்துள்ளார். வடக்குப் பகுதியில் செவ்ரான் மண்டலத்திற்குப் பின்னால் அமைந்துள்ள குஃபு பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த பாதை கண்டுப்படிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பகுதியில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.   ரகசிய சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கேபிள், கட்டமைப்பின் சுமையைக் குறைக்க கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்திற்கு பனிப்பொழிவு எச்சரிக்கை : விமானங்கள் இரத்தாகும் என தகவல்!

  • April 13, 2023
  • 0 Comments

ஸ்கொட்லாந்து மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த வாரம் முதல் பனிபெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பனிபொழிவு நிலவக்கூடும் என மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் சேவைகள் தாமதமாகலாம் எனவும், விமான சேவைகள் தாமதமடைதல் மற்றும் சில நேரங்களில் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த வாரத்தில் குளிருடனான வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ⚠️ Yellow weather warning issued ⚠️Snow and ice […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய பைகள்: சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸ் கடற்கரையொன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். புதன்கிழமை, Vicq-sur-Mer கடற்கரையில் மேலும் ஆறு பைகள் கரையொதுங்கின.மொத்தத்தில் அந்த பைகளில் 2.3 டன் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தண்ணீர் புகாத வகையில் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்டு அந்த போதைப்பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. […]

You cannot copy content of this page

Skip to content