சிங்கப்பூர்-மதுரை நேரடி விமான சேவை – மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை
முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அவருக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடிய நிலையில், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி சண்முகம் கோரிக்கை விடுத்தார். […]