பொழுதுபோக்கு

புதுப்பொழிவுடன் மீண்டும் வருகின்றான் “எந்திரன்”!!

  • June 1, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய எந்திரன் இரண்டாம் பாகமும் நல்ல இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் ‘எந்திரன்’ திரைப்படம் மீண்டும் ஜூன் 9ம் திகதி வெளியாகவுள்ள செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k ULTRA HD தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் […]

இலங்கை

இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்தின் வர்த்தகர்கள்,  தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் தாய்லாந்தின் தொழில் கூட்டமைப்பு,  தாய்லாந்தின் சுற்றுலா கவுன்சில்,  தாய்லாந்தின் முதலீட்டு சபை,  தாய்லாந்தில் உள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்டவற்றின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு வரிச்சலுகைகள் […]

ஐரோப்பா

கீவ் நகரின் சாலையில் திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு

  • June 1, 2023
  • 0 Comments

ரஷ்ய ஏவுகணையில் இருந்து உடைந்த சிறு பகுதி ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில், சாலையில் சென்று கொண்டிருந்த காருக்கு அருகே விழுந்ததால் மக்கள் கீவ் அச்சமடைந்தனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென பறந்து வந்த ஏவுகணையின் துண்டு, வெள்ளை நிற காருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது. அதேவேளை ரஷ்ய ஏவுகணை இலக்கை நெருங்குவதற்கு முன்னதாகவே இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அதன் மிச்சங்களே சாலையில் விழுந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

கனடாவில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

  • June 1, 2023
  • 0 Comments

கனடாவில் தரம் ஐந்து மாணவர்கள் பல விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 18 அடி உயரத்திலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாணவர்களில் பலருக்கு எலும்பு முறிந்து உள்ளதாகவும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.மரத்தினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு ஒன்றிலிருந்து இந்த மாணவர்கள் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாலம் போன்ற ஒரு கட்டமைப்பு இடிந்து விழுந்த காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி சுற்றுலா மேற்கொண்டு குறித்த […]

இலங்கை

யாழ்பாணத்தில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். இந்தத் திடீர் அதிகரிப்புத் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு அமர்த்துவதாகக் கூறப்பட்டது. பாடசாலைகளில் மீளிணைத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் சில நாள்கள் பாடசாலைக்கு […]

ஐரோப்பா

உக்ரைன் “நேட்டோவில் இணைய  தயாராக உள்ளது – ஜெலென்ஸ்கி

  • June 1, 2023
  • 0 Comments

உக்ரைன் “நேட்டோவில் இணைய  தயாராக உள்ளது” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) அறிவித்துள்ளார். மால்டோவாவில் நடந்த ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  போரின் போது உக்ரேனிய அகதிகளுக்கு விருந்தளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.  மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனின் எதிர்காலம் “முக்கியமானது என்றும் அவர் கூறினார். உக்ரைனில் ரஷ்யாவின்  ஆக்கிரமிப்பு, ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருப்பதால் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொழுதுபோக்கு

மறக்க முடியுமா “பெட்ட ராப்” கொண்டாட்டத்தை!! மீண்டும் வருகின்றது… கொண்டாட தயாரா???

  • June 1, 2023
  • 0 Comments

டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘பேட்ட ராப்’ திரைப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் […]

இலங்கை

நிதிக் கொள்கையில் தளர்வுகளை மேற்கொள்ள மத்திய வங்கி நடவடிக்கை!

  • June 1, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி அதன் நிதிக் கொள்கையில் தளர்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதற்கமைய நிலையான வைப்புக்களுக்கான வட்டியை 13 சதவீதமாகவும்,  நிலையான கடனுக்கான வட்டியை 14 சதவீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி நிதி சபையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதுடன்,  நாட்டின் பணவீக்கம் கணித்த காலத்தை விட விரைவில் ஒற்றை இலக்கத்தை எட்டும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையிலேயே […]

இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுத்தியாக அதிகரிப்பு!

  • June 1, 2023
  • 0 Comments

நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில்  தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை  கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த […]

ஆசியா

சீனாவிற்கு எதிரா அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் – அதிபர் ஜின்பிங்

  • June 1, 2023
  • 0 Comments

தென் சீன கடல், தைவான் போன்ற சர்ச்சைக்குரிய பிராந்தியங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது சமீப காலமாக மோசமான சூழலை நோக்கி சென்று வருகிறது. உக்ரைன் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை பகைத்து வருகின்றன. உக்ரைனில் இருந்து ரஷ்யாவை வெளியேறுமாறு சீனா அறிவுறுத்தாவிடில், சீனாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான உறவு மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் தேசிய […]