ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கும் புகலிட கோரிக்கையாளர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 64% உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், 881,200 முதல் முறை புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்கள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் அல்லாதவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சர்வதேச பாதுகாப்பிற்காக விண்ணப்பித்ததாக யூரோஸ்டாட் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் காரணமாக பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்ட 4.3 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. […]

செய்தி தமிழ்நாடு

பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

  • April 15, 2023
  • 0 Comments

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தின விழாவில் கலந்து கொண்ட அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள்  துணை வேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.. கோவை கே.சி.டபிள்யூ. கல்லூரியில் 2023 கல்வி ஆண்டு கல்லூரி தின விழா நடைபெற்றது.கல்லூரி நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி செயலர் முனைவர் யசோதா முன்னிலை வகித்தார். முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சாதனை மற்றும் செயல்பாடுகள் குறித்து […]

செய்தி தமிழ்நாடு

காவல் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சி

  • April 15, 2023
  • 0 Comments

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே காதல் மனைவியை சேர்த்து வைக்க காவல் நிலையம் வந்த கணவர்  காவல் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னமாங்கோடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் தர்மதுரை(33). இவரது மனைவி  ரோஜா பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். மீனவர் தர்மதுரைக்கும் அவரது மனைவி ரோஜாவுக்கும் வெண்ணிலா 7 தினேஷ் ஐந்து என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காதல் […]

செய்தி தமிழ்நாடு

தாம்பரம் அருகே மூவரசம்பட்டில் குளத்தில் குளித்த 5 பேர் மூழ்கினர்

  • April 15, 2023
  • 0 Comments

தாம்பரம் அருகே மூவரசம்பட்டில் குளத்தில் குளித்த 5 பேர் மூழ்கினர். L நான்கு பேரின் உடல்கள் மீட்பு மேல் ஒருவரை தேடும் பணி தீவிரம் சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மூவரசன் பேட்டையில் தர்மராஜ் கோவில் உள்ளது. இந்த தர்மராஜா கோவிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் விழா முடிந்தவுடன். தர்மராஜா கோவில் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். இதனை அடுத்து அப்பொழுது குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது 2 பேர் […]

செய்தி தமிழ்நாடு

ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தமன்னா

  • April 15, 2023
  • 0 Comments

கோவை 05-04-23 செய்தியாளர் சீனிவாசன் ஆயுதங்களுடன் இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தமன்னா என்கிற இளம்பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன். கோவையில் தமன்னா என்ற இளம்பெண் ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில். அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க கோவை இன்றியமையா பண்டங்கள் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி வரை அவரை பீளமேடு காவல்துறையினர் இன்ஸ்ட்டாகிராம் விவகாரத்தில் பிடித்து வந்து விசாரணை […]

செய்தி தமிழ்நாடு

வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தமிழக முழுவதும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வேம்பன் பட்டியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோயில் இந்து சமய […]

செய்தி தமிழ்நாடு

இந்திரா பட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது

  • April 15, 2023
  • 0 Comments

இந்திராபட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள இருந்திராபட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை  முன்னிட்டு வருடம் தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி   இன்று காலை 9 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது . 700 காளைகள் களம் காண உள்ள இப்போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர் இதுவரை 150 மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ள இப்போட்டியில் 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். போட்டியை […]

செய்தி தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்காக கோவையிலிருந்து புறப்படும் காஷ்மீர் ஏசி ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது

  • April 15, 2023
  • 0 Comments

இந்திய ரயில்வே இந்த ஆண்டு புதிய கோடை கால  சுற்றுலா பயணிகளுக்காக கோவையிலிருந்து புறப்படும்  காஷ்மீர் சிறப்பு சுற்றுலா ஏசி ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன்  ரயில்வே சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து பல்வேறு வகையான  புதிய கோடைகால சிறப்பு ரயில்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்நிலையில் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சவுத் ஸ்டார் இரயில் எனும் புதிய காஷ்மீர் வரை செல்ல உள்ள சுற்றுலா இரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மே 11 ந்தேதி காஷ்மீர் வரை செல்ல உள்ள இந்த சுற்றுலா […]

செய்தி தமிழ்நாடு

ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

  • April 15, 2023
  • 0 Comments

கோவை ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் சலசலப்பு. கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி  தற்போது நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்விற்கு ஆளுநர் வருகை புரிந்தவுடன், தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. A பிரிவில் (Category A) பதிவு செய்துகொண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது 2.996 மில்லியனாக உள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.93 சதவீதம் அல்லது 28,000 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதத்திலும் 3.6 சதவீதத்தினால் (114,000 பேரால்..) Category A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது மீண்டும் இந்த […]

You cannot copy content of this page

Skip to content