நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் மாயம்!
நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது என அந்நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.