இலங்கை

இலங்கையில் கடுமையாகும் தண்டனை! தண்டப்பணத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்திற் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் நலம் மற்றும் மன நிலையை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. அதனை பாா்வையிடுவதற்காக வந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தொிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், […]

இந்தியா

மணிப்பூர் கலவரம் தொடர்பில் 10 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்

  • June 20, 2023
  • 0 Comments

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3ம் திகதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர். கடும் வெயிலிலும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா […]

ஆஸ்திரேலியா

இணையத்தில் வைரலாகி வரும் உருண்டை வடிவ முட்டை !

  • June 20, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. ஆஸ்திரேலியா- வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் உடனே அந்த முட்டையை வாங்கிய அவர் இதுபோன்ற வடிவில் வேறு எங்காவது முட்டைகள் இருக்கிறதா என கூகுளில் தேடியுள்ளார். அப்போது 10 லட்சத்தில் ஒன்று தான் […]

ஐரோப்பா

கிரீஸ் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து : 9 எகிப்தியர்கள் நிதிமன்றத்தில் ஆஜர்!

  • June 20, 2023
  • 0 Comments

கிரீஸ் – மத்தியதரைக் கடலில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 எகிப்தியர்கள் கிரீஸ் நீதிமன்றத்தில் இன்று (20.06) முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த ஒன்பது பேர் மீதும்  ஒரு குற்றவியல் அமைப்பில் பங்கேற்பது, ஆணவக் கொலை மற்றும் கப்பல் விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிரீஸின் மேற்கு கடற்கரையில் பாழடைந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 500இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பிரித்தானியா

  • June 20, 2023
  • 0 Comments

பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக உக்ரைனுக்கு இழப்பீடு வழங்கப்படும் வரை பிரித்தானிய அரசாங்கம் அதன் தடைகளை நடைமுறையில் வைத்திருக்கும். மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உக்ரைனுக்கு வழங்கவும் இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.வெளியான தகவலின் அடிப்படையில், ரஷ்ய அரசு மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை சட்டம் உறுதி செய்யும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் ஐரோப்பிய அரசாங்கம் என […]

ஐரோப்பா

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி வழங்கிய மற்றுமோர் ஐரோப்பிய நாடு!

  • June 20, 2023
  • 0 Comments

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எஸ்தோனியா அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (20.06) ஆதரவாக வாக்களித்துள்ளனர். திருமணச் சமத்துவத்தை அறிமுகப்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு 55 உறுப்பினர்களில் 34 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அனைவருக்கும் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும். இந்த முடிவின் மூலம் நாங்கள் இறுதியாக  திருமண […]

பொழுதுபோக்கு

“நா ரெடி டா வரவா” லியோ படத்தின் பாடல் சற்றுமுன் வெளியானது

  • June 20, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் பாடல் ஒன்றின் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் வெளியிட்டுள்ளார். மேலும், இம்மாதம் 22ஆம் திகதி விஜய் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில், விஜய்க்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்றும் குறிப்பிட்டுள்ளார். Indha paadalai paadiyavar ungal VijayAdvance Happy Birthday wishes @actorvijay Annahttps://t.co/rOYUTtyEOO#NaaReady#Leo 🔥🧊 — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June […]

செய்தி பொழுதுபோக்கு

ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தாவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

  • June 20, 2023
  • 0 Comments

ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர். பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியிருக்கும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை இந்தக் கால தலைமுறையினர் புரிந்துகொள்ளும் விதமாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சீதையாக கீர்த்தி சனோனி, ராவணனாக சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹிந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் படு மொக்கையாக விமர்சனம் வந்ததன் காரணமாக படத்தின் […]

இலங்கை

ஓட்டுநர் உரிமங்களின் காலத்தை நீட்டிக்க நடவடிக்கை!

  • June 20, 2023
  • 0 Comments

ஓட்டுநர் உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கட்கிழமைக்குப் பிறகு (ஜூன் 26) வழங்கப்படும் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் துறை  முடிவு செய்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளின் தற்காலிக ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் போது, சமீபத்திய ஓட்டுநர் உரிம அட்டைகளின் பற்றாக்குறையால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

காப்புறுதிகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • June 20, 2023
  • 0 Comments

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்களிடமிருந்து மாத்திரம் காப்புறுதிகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சில நபர்கள் தள்ளுபடி அட்டைகள் போன்ற சிலவற்றை பொது மக்களிடம் கட்டணத்திற்கு விற்பது அல்லது சில காப்புறுதி தயாரிப்புகளில் தள்ளுபடிகளை வழங்குவது குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடி நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டின் இலக்கம் 43 இன் காப்புறுதி தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் […]