இலங்கை

இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்!

  • June 22, 2023
  • 0 Comments

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘வாக்குகளுக்கு ஆசைப்பட்டு,  இந்நாட்டின் தொல்பொருட் சின்னங்களில் கை வைக்க வேண்டாம்.  இதில் கை வைத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த நாட்டில் இன்று பாதுகாப்புக்கும் […]

பொழுதுபோக்கு

பாவனாவுடன் முதல் படத்திலேயே அந்தரங்க உறவு…. இயக்குனரின் திமிர் பேச்சு

  • June 22, 2023
  • 0 Comments

மிஷ்கின் இயக்கத்தில் உருவான சித்திரம் பேசுதடி திரைப்படம் வந்த புதிதில் அவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் மாணவர்கள் இந்தப் படத்தின் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சந்தோஷம் அடைகிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள். உடனே கொஞ்சம் கூட யோசிக்காத மிஷ்கின் இதன் மூலம் எனக்கு கிடைத்தது பாவனா தான். அவருடன் எனக்கு இருந்த அந்தரங்க உறவு தான் என்னுடைய சந்தோஷம் என ஸ்டைலாகவும், திமிராகவும் கூறி இருக்கிறார். மலையாள நடிகையான இவர் இந்த […]

ஆசியா

சீனாவின் உரிமை மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை – பென்பா செரிங்

  • June 22, 2023
  • 0 Comments

சீனாவின் உரிமை மீறல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என திபெத்தால் நாடு கடத்தப்பட்ட அரசியல் தலைவர் பென்பா செரிங் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் திபெத்தின் நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு தனது முதல் பயணத்தை  பென்பா செரிங் மேற்கொண்டு, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சீனாவின் உரிமை மீறல் குறித்து எடுத்துரைத்துள்ளார்.  திபெத் மற்றும் சின்ஜியாங்கில் சிறுபான்மையினரை தவறாக நடத்தியதற்காக சீன அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சீன […]

இலங்கை

குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது. 66 வயதுடைய குலசிங்க ஆராச்சியைச் சேர்ந்த அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலக்கம் 438/1, நுகவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பதாக குடிவரவுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ இருந்தால் விரைவில் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

கிரிமியாவை, கெர்சனுடன் இணைக்கும் பாலத்தை சேதப்படுத்திய ரஷ்யா!

  • June 22, 2023
  • 0 Comments

உக்ரேனிய ஏவுகணைகள்,  கிரிமியாவை கெர்சனுடன் இணைக்கும் பாலத்தை தாக்கியதாக ரஷ்யா கூறுகிறது. இதன்படி ரஷ்யாவின்  சோன்ஹார் சாலைப் பாலத்தை ஒரே இரவில் தாக்கியதால் போக்குவரத்தை வேறு பாதையில் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், வாகனங்களை வேறு பாதைக்கு திருப்பிவிடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே போர் தொடங்கியதில், இருந்து கிரிமையை மீட்டெடுப்போம் என உக்ரைன் சூளுரைத்துள்ளது. அதற்கான முதல்கட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் […]

உலகம்

மாலத்தீவு ஆளும் கட்சியில் இருந்து முன்னாள் அதிபர் நஷீத் விலகல்

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான முகமது நஷீத் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மொஹமட் நஷீட், ‘இந்த நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நான் இந்தக் கட்சியில் நீடிப்பது சிறந்தது என்று நான் நினைக்கவில்லை.என சுட்டிக்காட்டியுள்ளார். 56 வயதான முகமது நஷீத் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியில் இருந்து விலகியிருந்தாலும் சபாநாயகர் பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

‘லியோ’ ஃபர்ஸ்ட் லுக் இந்த படத்தின் காப்பியா? ஆதாரத்தோடு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

  • June 22, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு, நெட்டிசன்கள் பலர் கமெண்ட்டுகள் மூலம் படக்குழுவை போட்டு தாக்கி வருகிறார்கள். தமிழ் திரையுலகை தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என அனைத்து மொழிகளிலுமே தளபதி விஜய்க்கு ஆயிரம் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜயின் 49-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்த ரசிகர்களும், பிரபலங்களும் […]

செய்தி

சிங்கப்பூரை அடுத்து செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி

  • June 22, 2023
  • 0 Comments

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்க அரசும் அனுமதி அளித்துள்ளது. விலங்குகளின் செல்களில் இருந்து உருவாக்கப்படும் செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்குமாறு இரு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் பல்வேறு நாடுகளில் […]

இந்தியா

தன் பாட்டியை மனைவி என அழைத்த சிறுவன் ; அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

  • June 22, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவன் மறுபிறவி எடுத்ததாக கூறி குடும்பத்தினரை திகைப்பில் ஆழ்த்தினார். உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சனா. இவரது 8 வயது மகன் ஆர்யன். இவர் தன்னை 2015ஆம் ஆண்டு இறந்த தனது தாத்தாவின் மறுபிறவி என்று கூறினார்.தனது 4 வயதில் முதல் முறையாக தாய் ரஞ்சனாவிடம் நீ என் அம்மா அல்ல என்று கூறியுள்ளார். மாறாக அவரை தனது மகள் என்று தெரிவித்து ஆச்சரியமளித்தார். […]

இலங்கை

மலேசியா – இலங்கைக்கு இடையில் விமான சேவைகளை அதிகரிக்க இணக்கம்!

  • June 22, 2023
  • 0 Comments

மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன விடுத்த கோரிக்கைக்க இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகள் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்படி மேலும் இரு விமான சேவை நிறுவனங்கள் கோலாலம்பூர் மற்றும் கொழும்புக்கிடையில் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவுக்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சில தரப்பினரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் மலேசிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.