பிலிப்பைன்ஸில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இருவர் பலி; 7பேர் மாயம்
பிலிப்பைன்ஸில், மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்த்ளனர். மிண்டனாவோ தீவுக்கு கிழக்கே 337 கிலோமீற்றர் தூரத்தில் நேற்றிரவு இப்படகு கவிழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜென்சிஸ் 2 என பெயரிடப்பட்ட இப்படகில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 23 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களில் 14 பேர் ஏனைய மீன்பிடிக் படகுகளால் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதுடன் இன்றுகாலை மற்றொரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ‘மேலும் மாயமான […]