பொழுதுபோக்கு

“அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சு போச்சு” சவால் விட்டு சாதித்த தலைவர்..!

  • June 27, 2023
  • 0 Comments

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் […]

இந்தியா

விமான ஆசனத்தில் சிறுநீர் கழித்த பயணி கைது!

  • June 27, 2023
  • 0 Comments

இந்திய விமானமொன்றில் பயணிகளுக்கான ஆசனங்கள் மீது சிறுநீர், மலம் கழித்த குற்றச்சாட்டில் பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் திகதி மும்பையிலிருந்து டெல்லிக்கு பறந்துகொண்டிருந்த எயார் இந்தியா விமானம் ஒன்றில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிளைட் ஏஐ 866 எனும் இவ்விமானத்தின் 9 ஆவது வரிசை ஆசனங்கள் மீது சிறுநீர் கழித்தார் என எயார் இந்தியா நிறுவனம்  தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து, விமான ஊழியர்களால் குறித்த  பயணி தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார் எனவும், டெல்லி இந்திரா காந்தி […]

இந்தியா

செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது: நீதிமன்றத்தில் வாதம்

கடந்த 13ம் திகதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதமானது என்று அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜி சட்டப்படி கைது செய்யப்பட்டார். அவர் மீதான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்ரவர்த்தி […]

இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நிராகரிப்பு!

  • June 27, 2023
  • 0 Comments

உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி  சட்ட மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறித்த மனுக்கள் இன்று (27.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நிராகரிக்கப்பட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே,  பிரியந்த ஜயவர்தன,  விஜித் மலல்கொட,  முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

ஐரோப்பா

வாக்னர் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடும் ரஷ்யா!

  • June 27, 2023
  • 0 Comments

பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படையினருக்கு  எதிரான குற்றச்சாட்டுகளை ரஷ்யா கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது விசாரணையில் கலகத்தில் பங்கேற்றவர்கள் “குற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர்” என ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB)  கூறியுள்ளது. பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் தரகு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர மாட்டோம் என ரஷ்யா ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா

இம்ரான் கைது விவகாரம் : பாகிஸ்தானில் மூன்று ஜெனரல் அதிகாரிகள் பதவிநீக்கம்!

  • June 27, 2023
  • 0 Comments

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ராணுவச் சொத்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக மூன்று அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு லெப்டினன்ட் ஜெனரல் உட்பட மூன்று மூத்த அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் பணி நீக்கம் செய்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார். உள்ளக விசாரணை மற்றும் அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது […]

பொழுதுபோக்கு

பிரபல இளம் யூடியூபர் தேவராஜ் படேல் மரணம்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர்

  • June 27, 2023
  • 0 Comments

சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளார். இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ராய்ப்பூரைச் சேர்ந்தவர் தேவராஜ் படேல் (22) ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சினிமா பஞ்ச் வசனங்களை பேசுவது, சமைப்பது, வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்வது, நண்பர்களுடன் சேர்ந்து காமெடி செய்வது என யூடியூபையே இவர் ஒரு கலக்கு கலக்கி வந்தார். சற்று குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பதால் தேவராஜ் படேல் […]

உலகம்

புயல் காற்றில் சிக்குண்ட கப்பல் : தலைதெறிக்க ஓடிய பயணிகள்!

  • June 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புயலினால் ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்டிபென்டன்ஸ் ஆஃப் தி சீஸ் என்ற கப்பல் புளோரிடா  துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் புயல் தாக்கத்தை எதிர்கொண்டனர். இதன்பொது தளபாடாங்கள் முழுவதும் காற்றில் பறந்த நிலையில், மக்கள் இறுக்கமான தூண்கள் மற்றும் பொருட்களை பிடித்துக்கொண்டு உள்ளனர். புயலின் தீவிரத்தை புலப்படுத்தும் வகையில் குறித்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அபாயகரமான அதிவேகக் காற்று கப்பலைத் தாக்கியதால், பயணிகள் உயிருக்கு பயந்து […]

இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

  • June 27, 2023
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜூன் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 50,000 முதல் 100, 000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் முதல் முறையாக வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முகவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் ஒருவர் 18 […]

இலங்கை

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை

  • June 27, 2023
  • 0 Comments

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் அதிகரித்த இடவாடகைக் கட்டணம் அறவிடப்படுவதாக, வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன். கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் (26) வடக்குமாகாண ஆளுநரை […]