வட அமெரிக்கா

இறந்தவர்களின் உடல்களுடன் மீட்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பல்

  • June 29, 2023
  • 0 Comments

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகிள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான […]

இலங்கை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

  • June 29, 2023
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (ஜூன் 29) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை புத்தளம் முந்தலம பிரதேசத்தில் வைத்தே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகலா மகேஷ்வரன் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள், வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இலங்கை

லொத்தர் சீட்டுக்களின் வி்லை அதிகரிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. இதன்மூலம், என்எல்பி மற்றும் டிஎல்பி லாட்டரி சீட்டுகளின் விலை 20 ரூபாயில் இருந்து 40ரூபாய் வரை  இருந்து உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் வரும் ஜுலை 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகுிறது.  

ஐரோப்பா

இலங்கை இளைஞனால் ரோமானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • June 29, 2023
  • 0 Comments

ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 17 வயதுடைய இவ் இளைஞர் 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் குப்பைகளுக்கு மத்தியில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்களுக்கு இடையே இடம் பெற்ற வாக்குவாதமே கொலையில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

கரண் ஜோஹர், ராம் சரண், ஜூனியர் NTR, மணிரத்னத்திற்கு Oscars அழைப்பு

  • June 29, 2023
  • 0 Comments

ஆஸ்கர் தேர்வு குழு பட்டியலில் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 4 தென்னிந்திய பிரபலங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் குழுவில் இணைய, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக சேருவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே இந்த தேர்வு குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான் […]

இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

  • June 29, 2023
  • 0 Comments

இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை மன்னாரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது. இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் விசேடமாக துவா […]

பொழுதுபோக்கு

இன்று வெளியாகிறது சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்!

  • June 29, 2023
  • 0 Comments

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்து கலக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் செலவை குறைப்பதற்கு மக்கள் எடுத்துள்ள நடவடிக்கை!

  • June 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பொருளாதாரத்தில் மிகக் குறைந்த நிலையில் உள்ள ஆஸ்திரேலியர்களில் 2/3 பேர் சரியான நேரத்தில் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சுமார் 25 சதவீத மக்கள் குளிர்காலத்தில் வெப்பச் செலவைக் குறைத்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் தங்கள் சுகாதாரச் செலவைக் குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியர்கள் சிலர் தினமும் குளிக்கும் நேரத்தை 03 நிமிடங்களாக மட்டுப்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மின்சாரத்தை மீதப்படுத்தும் என்ற நம்பிக்கையில் சுமார் 1/3 பேர் சீக்கிரம் […]

இலங்கை

கொழும்பில் களைகட்டிய கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழா!

  • June 29, 2023
  • 0 Comments

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வரவேற்பு நிகழ்வு நேற்றைய தினம் (27) கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தலைமையில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் அ‌கில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஓன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ் சந்துரூ பெர்ணாடோ,பல நாடுகளின் இராஜ தந்திரிகள், மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் […]

வாழ்வியல்

உடல் எடையை எளிதாக குறைக்கும் வெந்தயம்!

  • June 29, 2023
  • 0 Comments

வெந்தயம் பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை உடல்நல பிரச்சினைகளுக்கும் அப்படியே மென்று தின்னலாம். அது மட்டும் இல்லாமல் நீரில் ஊற வைத்து சாப்பிடலாம். அந்த வகையில் வெந்தயத்தில் வைட்டமின் ஏ வைட்டமின் பி6 இரும்பு சத்து நார்ச்சத்து மெக்னீசியம் மாங்கனி தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெந்தயம் ஒரு முக்கிய ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது. வெந்தயத்தின் முக்கியமான நன்மை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் முடி வளர்ச்சியை ஊக்கி வைக்கும் ஊட்டச்சத்துக்கள் […]