கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!
தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது செல்போனை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் ரெயில் ஏறினார். சாதவாகனா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்த அவர், கம்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். காசிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் அவரது செல்போனை […]