மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலத்துரையாடிய மைத்திரிபால சிறிசேன
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவை சேனாதிராஜாவினுடைய மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் […]