ஐரோப்பா

பிரித்தானியாவில் பரபரப்பு! ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்திய மாணவன்

பிரித்தானியாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் Gloucestershire இல் உள்ள Tewkesbury பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றுள்ளார். Gloucestershire பொலிஸாரின் தகவலின்படி, திங்கள்கிழமை காலை 9:10 மணியளவில் ஆஷ்சர்ச் சாலையில் உள்ள பள்ளியில் இருந்து மாணவர் ஒருவரால் ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பள்ளியை உடனடியாக மூட உத்தரவிட்டதாக பொலிஸார் […]

இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்!

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக் கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் […]

உலகம்

வாக்னர் குழுவின் கலகத்திற்குப் பிறகு புடினை சந்தித்த பிரிகோஜின்?

வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் கலகத்திற்குப் பிறகு ரஷ்யாவின் விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட வாக்னர் குழுவின் கலகத்திற்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினை சந்தித்தார் என்று கிரெம்ளின் கூறுகிறது. மாஸ்கோவில் நடந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட 35 வாக்னர் கமாண்டர்களில் கூலிப்படையின் தலைவரான பிரிகோஜினும் ஒருவர் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மேலும் ஹெரிவித்த்துள்ளார். உக்ரைன் போர் முயற்சி மற்றும் கலகம் குறித்து ஜனாதிபதி […]

இலங்கை

போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு உதவி செய்யுமாறு புலம்பெயர்ந்தோரிடம் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் போராளிகளுக்கு உதவி செய்வதாக இருந்தால் போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு உதவி செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது நேற்றையதினம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில், ”போரிலே பல உயிர்களை தியாகம் செய்த போராளிகளின் மதிப்பு, மரியாதை இழந்து நிற்கின்ற ஒரு தேசத்திலே சமூகங்கள் எங்களை […]

இலங்கை

அவர்கள் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி கொடுமையானது; முன்னாள் போராளி அரவிந்தன்

  • July 10, 2023
  • 0 Comments

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது நேற்றையதினம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,தொடர்ந்தும் இன்றுவரை காயங்களோடு போராடி கொண்டிருக்கின்றவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. மரணமாகி மரணச்சடங்கினை செய்வதைவிட அவர்கள் வாழ்வதற்கான ஒரு விடயத்தை முன்னெடுக்க விரும்புகின்றோம். தற்போது இலங்கையிலே பதின்னான்காயிரத்திற்கு மேற்பட்ட […]

புகைப்பட தொகுப்பு

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் விளையாட்டு விழா

  • July 10, 2023
  • 0 Comments

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால் விளையாட்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழா சனிக்கிழமை (8) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. குறித்த விளையாட்டு விழாவில் மன்னார் மறை மாவட்டத்தை சார்ந்த அனைத்து பங்கு இளையோர் இணைந்து நான்கு குழுக்களாக பிரித்து விளையாட்டுகள் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயம் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட […]

பொழுதுபோக்கு

தளபதி விஜய் சினிமாவில் இருந்து நீண்ட இடைவேளைக்கு திட்டமிடுகிறாரா? அப்போ ‘தளபதி 69’?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படம் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கிடையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘தளபதி 69’ தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக, ‘தளபதி 69’ படத்தில் விஜய்யை இயக்க ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப் பிறகு பிளாக்பஸ்டர் தயாரிப்பாளரான அட்லீ மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 7 ஆம் திகதி ஜவான் வெளியான பிறகு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தளபதி 69 க்கான முன் தயாரிப்புகளை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 13மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!

  • July 10, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தாய் ஒருவர் காரை தன்னுடைய 13 மாத பெண் குழந்தை மீது தவறுதலாக மோதிய சம்பவம் இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவ்-வில் தாய் ஒருவர் தன்னுடைய காரை நெருக்கமான பகுதியில் செலுத்தி கொண்டு இருந்த போது தவறுதலாக அவருடைய 13 மாத பெண் குழந்தை மீது காரை செலுத்தியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த 13 மாத பெண் குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக எடுத்து […]

இலங்கை

குடிபோதையில் நண்பனை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த நபர்!

  • July 10, 2023
  • 0 Comments

வவுனியா, கல்மடு ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக […]

இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு 2022 மற்றும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான புதுப்பிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.