மத்திய கிழக்கு

தென் ஆப்பிரிக்காவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவு – 24 பேர் உயிரிழப்பு!

  • July 6, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவசர சேவைகளுக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது. மேலும், இது ஒரு வாயு வெடிப்பு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது “விஷ வாயு” கொண்ட “சிலிண்டரில் இருந்து ஏற்பட்ட எரிவாயு கசிவு” என்பதைக் கண்டுபிடித்தனர். இறந்தவர்களில் பெண்களும் […]

ஆஸ்திரேலியா

மெல்போர்ன் நகரில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • July 6, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரின் வடக்கே 15 கிலோ மீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.4 அலகுகளாக பதிவானது. இதனால் இதன் தீவிரம் குறைவு என்பதால் பொதுமக்கள் இடையே பெரிய அளவில் பீதி ஏற்படவில்லை. அதிகாரிகள் கூறும்போது பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றனர். பெண்ணொருவர் சமூக ஊடகத்தில், ‘நான் முன்பு ஏதோ உணர்தேன் […]

ஆசியா

சீனாவில் கொளுத்தும் வெப்பத்தால் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு உத்தரவு!

  • July 6, 2023
  • 0 Comments

சீனத் தலைநகரில் கொளுத்தும் வெப்பத்தின் மத்தியில் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிததுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக காணப்படுகிறது. இதன்காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அலகுகள் வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்கும் குளிரூட்டுவதற்கும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே மக்கள் வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

  • July 6, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய   நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனதி எச்சங்கள்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 3.5 பில்லியனாக அதிகரிப்பு!

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஜுன் மாதத்தில் 3.5 பில்லியன் அதிகரித்துள்ளது. இதில் சீன மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும் அடங்கும் என்று இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது. உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் பணப்புழக்க நிலைமைகள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2023 இன் முதல் பாதியில் சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கப் பத்திரச் சந்தையில் நிகர அந்நிய முதலீட்டு வரவுகளில் […]

இலங்கை

கண் சத்திர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உயிரிழப்பு – இலங்கையில் சம்பவம்!

  • July 6, 2023
  • 0 Comments

கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் நேற்று (ஜுலை 06) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் குறித்த மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் மயக்க மருந்து கொடுக்கப்படுவதனால் ஏற்படும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த மார்க் – 4 மணி நேரத்தில் 5 மில்லியன் புதிய கணக்குகள்

  • July 6, 2023
  • 0 Comments

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக சரிய தொடங்கிய நிலையில் தற்போது புதிய அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்தின் புதிய வரவான Threads இன்று வெளியான நிலையில் வேகவேகமாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர். எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்வீட் பார்ப்பதற்கு அளவுகோல், பணியாளர்கள் பணி நீக்கம் என ட்விட்டரின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில்தான் மெட்டா நிறுவனம் தனது புதிய […]

இலங்கை

இலங்கை முழுவதும் 14 ஆயிரம் மின்தடை சம்பவங்கள் பதிவு – காஞ்சன விஜேசேகர!

  • July 6, 2023
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 14 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (ஜுலை 06) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா,  கண்டி மாவட்டங்களிலும்,  நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் அதிகளவான மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 148,000 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் இதன் விலை 149,000 ரூபாவாக காண்பட்டது. இதேவேளை, 161,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்க பவுனின் விலை இன்றைய தினம் 160,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் இதனை தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

அதிகாலையில் வௌியானது Salaar Teaser.. அப்படியே கே.ஜி.எப் மாதியே இருக்கு….

  • July 6, 2023
  • 0 Comments

கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். அதேபோல் மலையாள நடிகர் பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் பிரபாஸ், சலார் படத்தை மலைபோல் நம்பி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு […]