ஐரோப்பா

நீண்ட தூர ஆயுதங்கள் இல்லாமல் இல்லாமல் போரிடுவது கடினமானது – செலன்ஸ்கி!

  • July 7, 2023
  • 0 Comments

நீண்ட தூர ஆயுதங்கள் இல்லாமல் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவது “கடினமானது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky இன்று (ஜுலை 07) தெரிவித்துள்ளார். நீண்ட துர ஏவுகணைகளை வழங்கும் முடிவு வொஷிங்டனை சார்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நீண்ட தூர ஆயுதங்கள் இல்லாமல், ஒரு தாக்குதல் பணியை மேற்கொள்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ள செலன்ஸ்கி, தற்காப்பு நடவடிக்கையை நடத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் “நாங்கள் அமெரிக்காவுடன் நீண்ட தூர அமைப்புகளைப் பற்றி பேசுகிறோம் எனவும் மற்றைய […]

ஐரோப்பா

இஸ்ரேலில் மீண்டும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்

  • July 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலில் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் அனைனவரும் டெல் அவிவ் நகரில் குவிந்து முழக்கமிட்டனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தன் மீது உள்ள புகார்களை ரத்து செய்ய சட்டவிதிகளை மாற்றி வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர். மக்கள் போராட்டங்களையும் மீறி இஸ்ரேல் பிரதமர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் […]

இந்தியா

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு! குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தனி மனுவும் […]

இலங்கை

இலங்கையில் சில முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்!

  • July 7, 2023
  • 0 Comments

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மீட்டியாகொட ஆசிய பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ​​போகஹவெல பிரதேசத்தில் உள்ள ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் […]

இலங்கை

இந்திய கடனை செலுத்த கால அவகாசம்!

  • July 7, 2023
  • 0 Comments

இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனை மீளச் செலுத்த இந்தியா கால அவகாசம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்படி 12 ஆண்டு காலம் அவகாசம் வழங்க இந்திய திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. […]

ஐரோப்பா

புதினை காண முடியாமல் கதறிய சிறுமி ; அதிபர் மாளிகைக்கு வரவழைத்து விருந்தளித்த புதின்

  • July 7, 2023
  • 0 Comments

ரஷ்ய அதிபர் புதினை காண முடியாமல் கதறி அழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புதின் விருந்தளித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தாகெஸ்தான்(Dagestan) குடியரசுக்கு அதிபர் புதின் சுற்றுப்பயணம் சென்றார். அப்போது அவரைக் காண 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா காத்திருந்தார். கூட்டத்தில் புதினை சந்திக்க முடியாமல் போனதால் ரைசாட் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைக்கண்டு உடனடியாக சிறுமியை அதிபர் மாளிகையான க்ரெம்ளினுக்கு புதின் நேரில் வரவழைத்தார். விழி […]

வட அமெரிக்கா

டைட்டான் நீர்மூழ்கியை தேட கனடிய அரசு செலவிட்டுள்ள தொகை?

  • July 7, 2023
  • 0 Comments

டைட்டான் நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்காக ஈடுபடுத்தப்பட்ட ஒரு கனடிய விமானத்திற்காக சுமார் மூன்று மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயிருந்தனர். இந்த நீர் மூழ்கி கப்பல் காணாமல் போனமை தொடர்பில் கண்டறிவதற்காக அமெரிக்கா மற்றும் கனடிய அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தன. அந்த வகையில் கனடிய விமானப்படைக்கு சொந்தமான சிபி 140 அரோரா என்ற விமானம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டது.நீர் […]

பொழுதுபோக்கு

அனுஷ்கா 40 வயதாகியும் திருமணமாகாமல் இருக்க இதுதான் காரணமா? போட்டுடைத்தார் பயில்வான்

  • July 7, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்காவுக்கு திருமணமாக வாய்ப்பே இல்லை என பயில்வான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு நடிகையான அனுஷ்கா ரெண்டு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அனுஷ்காவுக்கு அப்படம் கைகொடுக்காததால், மீண்டும் டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதையடுத்து கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்த அனுஷ்காவுக்கு விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி […]

செய்தி

ஆயுர்வேத திருத்த மசோதாவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

  • July 7, 2023
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட “ஆயுர்வேத திருத்த மசோதா” அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை பாராம்பரிய ஆயுர்வே மருத்துவர் ரத்னபால தாக்கல் செய்துள்ளதுடன், பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். குறித்த மனுவில், ஆயுர்வேத திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற வேண்டும் என்றும்,  ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி அருண லக்சிறி உனவதுன ஊடாக சமர்ப்பித்த இந்த மனுவில், […]

இலங்கை

தெற்கு கடல்பகுதியில் புதிய போக்குவரத்து திட்டம் ; நிராகரித்துள்ள இலங்கை

  • July 7, 2023
  • 0 Comments

இலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் புதிய போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது. சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் செயற்படும் கடல்சார் சுற்றுசூழல் பாதுகாப்புக் குழுவின் 80வது அமர்வில் இதற்கான முன்மொழிவு பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் வடக்கு இந்திய பெருங்கடலில் அழிந்து வரும் நீலத்திமிங்கலங்கள் மீது கப்பல்கள் மோதுவது அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. எனவே இந்த முன்மொழிவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிப்பதாக தெரிவித்தது.