வட அமெரிக்கா

காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் ; 8 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை!

  • July 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடி பரியாஸ் (25). இவரது தயார் ஜானி சந்தனா.இவர் 2015ல் தனது 17 வயதில் காணாமல் போனதாக ஜானி சந்தனா பொலிஸில் புகார் அளித்து உள்ளார். திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூடி வெளியே வந்து உள்ளார். அப்போதுதான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறி உள்ளார். ரூடி இன்னும் காணவில்லை என்று பிடிவாதமாக இருந்து அவரது தாயார் தொடர்ந்து […]

ஐரோப்பா

ரோபோக்கள் (AI) பங்கேற்கும் உலக உச்சிமாநாடு – ஒரு சுவாரஸ்ய தகவல்!

  • July 7, 2023
  • 0 Comments

ரோபோக்கள் உலக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல விவாதங்கள் எழுந்துள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் பொது நலனுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த உலக உச்சி மாநாடு தற்போது நடைபெறுகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த உச்சிமாநாட்டில், ரோபோக்கள் மற்றும்  தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்துகொண்டுள்ளனர். இந்த மாநாடு  உலகளாவிய மாநாடுகளில் ரோபாட்டிக்ஸ் மற்றும் AI இன் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு […]

பொழுதுபோக்கு

ஒரு நைட்டுக்கு 40 லட்சமா? தனுஷ் பட நடிகை பற்றி அப்படியொரு ட்வீட்….

  • July 7, 2023
  • 0 Comments

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் கதிர் தனுஷுக்கு மனைவியாக மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிகை எல்லி அவ்ரம் நடித்திருந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 2013ல் பாலிவுட்டில் வெளியான மிக்கி வைரஸ் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை எல்லி அவ்ராம் பலான தொழில் செய்து வருவதாக பாலிவுட்டின் பயில்வான் ரங்கநாதன் உமைர் சந்து பரபரப்பு ட்வீட் […]

உலகம்

விவசாயத்தை காக்க பிலிப்பைன்ஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை அந்நாட்டு அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளார். 1986 இல், மக்கள் எழுச்சியில் மார்கோஸின் தந்தை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16%, சுமார் 50 லட்சம் ஹெக்டேர் […]

இலங்கை

நாய்க்கு குருதி பரிசோதனை விவகாரம் ;மன்னிப்பு கோரியுள்ள நிலையைய உரிமையாளர்

  • July 7, 2023
  • 0 Comments

வவுனியாவில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தை தனது வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நபர் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் நாய்க்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் […]

ஐரோப்பா

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 6 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் காயம்

  • July 7, 2023
  • 0 Comments

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 80 பேர் வரை காயமடைந்துள்ளனர். இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களை சேதப்படுத்துவதற்கு முன்னதாக முழுவதும் அணைக்கப்பட்டது, இருப்பினும் கட்டிடம் முழுவதும் நச்சு வாயுக்கள் பரவியது. முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், […]

வட அமெரிக்கா

போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

  • July 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர். மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் […]

ஆசியா

பயணிகளுக்கு ஆடைகளை வாடகைக்கு வழங்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ்!

  • July 7, 2023
  • 0 Comments

ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) ஒரு புதிய ஆடை வாடகை திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டம் ஜப்பானுக்கு பறக்கும் பார்வையாளர்களை இலகுவாக பயணிக்க அனுமதிக்கிறது மற்றும் விமான நிறுவனங்களில் இருந்து வந்தவுடன் ஆடைகளை வாடகைக்கு எடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஜப்பானின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான சுமிடோமோ கார்ப்பரேஷன், வழங்குகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,   “COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான மக்கள் மீண்டும் விமான பயணங்களை மேற்கொள்கிறார்கள். பயணிகள் தங்கள் பயண இடங்கள், தங்குமிடங்கள், போக்குவரத்து […]

இலங்கை

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2023 கல்விப் பொதுத் தராதர. உயர்தரப் பரீட்சை இவ்வருட இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 2023 கல்விப் பொதுத் தராதர. சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், O/L பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி, தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார். பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு […]

இலங்கை

அரசின் வசமாகியது பசில் ராஜபக்சவின் வீடு!

  • July 7, 2023
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட வீடொன்று தற்போது அரசு வசமாகியுள்ளது. மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடே அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் […]