பிரேஸிலில் இடிந்து வீழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு ;8பேர் பலி, ஐவர் மாயம்
பிரேஸிலின் வடக்கு, கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலர் மீட்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.