ஐரோப்பா

ஸ்பெயினில் ஆச்சரியம் – ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்

  • April 30, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களளை ஸ்பெயினின் பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர். அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்துள்ளனர். இதன்மூலம் செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு […]

இலங்கை

பிரான்ஸில் மீண்டும் வீதிக்கு இறக்கும் மக்கள் – 12,000 அதிகாரிகள் குவிப்பு

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புக்காக 12,000 அதிகாரிகள் குவிக்கப்பட உள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள 13 ஆவது நாள் போராட்டம் இதுவாகும். தலைநகர் பரிசில் 100,000 பேர் வரை ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வன்முறைகளும் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பலத்த எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக இது […]

இலங்கை

இலங்கையில் 52 வயதான பெண் ஒருவருக்கு நடந்த கொடூரம்

  • April 30, 2023
  • 0 Comments

மிஹிந்தலை பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமது தாயுடன் வசித்து வந்த குறித்த பெண் நேற்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அதன்போது, ​​பக்கத்து வீட்டில் வசித்துவந்த சந்தேக நபர், குறித்த வீட்டுக்குச்சென்ற அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியில் சென்று வீடு திரும்பிய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின்முதல் குடியரசு வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிலை!

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முதல் குடியரசு வங்கி திவாலாகும் நிலையில் உள்ளதென தகவலட வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் முதல் குடியரசு வங்கி கடந்த ஓராண்டாக சந்தாதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்ததில் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. மேலும் வெள்ளிக்கிழமை முதல் குடியரசு வங்கியின் பங்குகள் 40% சரிந்து கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் வங்கியின் 97% பங்குகள் வீழ்ச்சியடைந்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கியின் வாடிக்கையாளர் நலனுக்காக அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் […]

வாழ்வியல்

ஆண்மையை பாதிக்கும் உணவுகள் – ஆண்களுக்கு எச்சரிக்கை

  • April 30, 2023
  • 0 Comments

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சார்பில் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

காதலில் நீங்கள் எந்த நிலை – அறிந்திருக்க வேண்டியவை

  • April 30, 2023
  • 0 Comments

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்கள். பழமொழியாக இருந்தாலும் இக்காலத்திற்கு அது மிகவும் பொறுத்தமானதாக உள்ளது. துவக்கத்தில் துள்ளலாக இருக்கும் காதல், காலப்போக்கில் காற்று இறங்கிய பலூன் போல தளர்ந்து விடுகிறது. வாழ்க்கை துணை என்ற ஸ்தானத்தில் இருப்பவரால் வாழ்வின் மிகப்பெரும் பாரம் ஆகவும் முடியும். காதல் வாழ்க்கை கசந்து போகும் வேளையில் அதனை சீர்செய்வது அவசியமாகிறது. அதற்கு, முதலில் உங்கள் காதல் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். காதலில் சிறிய […]

ஆசியா

சிங்கப்பூரில் சொத்துக்களை வாங்க எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களின் ஆர்வத்தினால் குடியிருப்புகள் மற்றும் நிலங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் குடியிருப்புகள் மற்றும் நிலங்களை அதிகம் வாங்க ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வெளிநாட்டினர் குடியிருப்பு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவதற்கு செக் வைக்கும் வகையில் முத்திரைத்தாள் கட்டணத்தை இரண்டு மடங்காக சிங்கப்பூர் அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், குடியிருப்புகள் மற்றும் நிலங்களை வெளிநாட்டினர் வாங்குவது குறையும். அதேபோல், சிங்கப்பூரில் பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளின் […]

இலங்கை

வவுனியா ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

  • April 30, 2023
  • 0 Comments

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார். இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார். இவ்விபத்தில் 29 வயது மதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

  • April 30, 2023
  • 0 Comments

கழிப்பறைகளை விட கையடக்க தொலைபேசிகளில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் கையடக்க தொலைபேசிகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறலாம். சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கையடக்க தொலைபேசிகளை அதிக நேரம் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலை, மாலை, இரவு என இடைவெளியே இல்லாமல் நேரம் பார்க்காமல் முழுக்க முழுக்க கையடக்க தொலைபேசிகளை உபயோகித்து வருகிறார்கள். அத்தகைய கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு நன்றாக இருந்தாலும், அதில் கிட்டத்தட்ட […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வீடொன்றில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை சுட்டுக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டு வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 5 பேரும் ஹொண்டுராஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இது அமெரிக்காவை உலுக்கியிருக்கும் ஆகப்புதிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். கொல்லப்பட்டவர்களில் 8 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார். சம்பவத்தின்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆடவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் AR 15 ரக […]

You cannot copy content of this page

Skip to content