அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றி எரிந்த தீ; தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதி!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீ, இளம் தாய் ஒருவரையும், அவரது பதின்ம வயது மகனையும் பலிகொண்டுவிட்டது. கடந்த வியாழக்கிழமை, ஜெனீவாவிலுள்ள Lignon என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் தீப்பற்றியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், கட்டிடத்திலிருந்து வெளியேறுவதற்கான படிக்கட்டுகளில், படுகாயமடைந்த நிலையில் ஒரு 28 வயது பெண்ணும், அவரது மகனான 13 வயது சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டனர்.தீயிலிருந்து தப்பி வெளியேற முயலும்போது அவர்கள் […]