இலங்கை

யாழில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு – இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

  • July 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.30 மணியளவில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்மீது கத்திக் குத்தும் நடாத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் காலை உயிரிழந்தார். பண்டத்தரிப்பு – […]

இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர முடியும் – சுனில் வட்டகல!

  • July 11, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு தேவையான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என அரசாங்கம் கூறுவது பொய்யானது.  அதனை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் கொண்டு வர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். திறைசேரி செயலாளரிடம் ஆவணம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாகவும், அதன் படி கடந்த […]

பொழுதுபோக்கு

‘இதெல்லாம் ஒரு மூஞ்சா’… கீர்த்தி சுரேஷை ஓரங்கட்ட பார்த்த கதை உங்களுக்கு தெரியுமா?

  • July 11, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷை திரைத்துறையில் இருந்து ஓரங்கட்ட பார்த்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன மாமன்னன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதுதவிர அரை டஜன் படங்கள் அவர் கைவசம் […]

உலகம்

உலகம் முழுவதும் 14 மில்லியன் பேரின் வேலைகள் இழக்கப்படும் அபாயம்

  • July 11, 2023
  • 0 Comments

பொருளாதார சிக்கல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக அடுத்த 05 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14 மில்லியன் வேலைகள் இழக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு, 69 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும், ஆனால் சுமார் 83 மில்லியன் வேலைகள் இழக்கப்படும். உலகம் முழுவதும் உள்ள சுமார் 800 நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலக பொருளாதார மன்றம் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. இழக்கப்படவுள்ள 14 மில்லியன் வேலைகள் தற்போதைய உலக பணியாளர்களின் […]

இலங்கை

26 பாலங்கள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் – சிறிபால கம்லத்!

  • July 11, 2023
  • 0 Comments

நாடு முழுவதிலும் 26 பாரிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக   நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பாலங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த பாலங்கள் ஆபத்தான நிலையில், இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னம்பிட்டிய பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொத்தலிய பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாட்டிற்கு 200 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு மாயம்

  • July 11, 2023
  • 0 Comments

ஸ்பெயினை நோக்கிச் சென்ற ஒரு படகைக் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற படகே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஸ்பெயினின் கெனரி (Canary) தீவுகளை நோக்கிச் சென்ற அந்தப் படகில் குறைந்தது 200 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. ஆப்பிரிக்காவின் செனகல் (Senegal) நாட்டில் இருந்து ஸ்பெயினை நோக்கிக் கடந்த மாதம் 27ஆம் திகதி அந்தப் படகு புறப்பட்டது. படகில் ஏராளமான சிறுவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே போன்ற மேலும் இரண்டு படகுகளையும் காணவில்லை. கடந்த […]

இலங்கை

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி தயார்!

  • July 11, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், அதன் பின்னர் உருவாகும் அரசாங்கத்தின் கீழ் அவருடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு விடுத்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கூறியுள்ளார். பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் சஜித் பிரேமதாசவை பிரதமராக முடியும் எனவும், […]

ஐரோப்பா

பிரான்ஸில் மாயமான சிறுவன் – தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்

  • July 11, 2023
  • 0 Comments

பிரான்ஸில் காணாமல்போன 2 வயதுச் சிறுவனைத் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றனர். பிரான்ஸ் பொலிஸார் அதற்கான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளது. ஆகாயம் வழியாகவும் நிலத்திலும் தேடல் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எமைல் (Émile) என்ற அந்தச் சிறுவன் தமது தாத்தா பாட்டியின் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போயுள்ளார். அந்தச் சம்பவம் 8 ஆம் திகதி Alpes-de-Haute-Provence என்ற பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் நடந்தது. சிறுவன் நன்றாக நடக்கக்கூடியவன் என்றும் கடத்தப்பட்டதற்கான அறிகுறி ஏதும் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்!

  • July 11, 2023
  • 0 Comments

உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும்  சட்டவிரோத குடியேறிகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. San Francisco Chronicle வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  ஹொண்டுராஸ் பகுதியில் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மெக்சிகன் கார்டெல்களின் உதவியுடன் போதைப்பொருள் சந்தையை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள டெண்டர்லோயின் மற்றும் சவுத் ஆஃப் மார்க்கெட் சுற்றுப்புறங்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரசித்தமானவை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து மூலம் தங்கள் தெருக்களில் பணிபுரியும் இடங்களுக்குச் செல்கிறார்கள் எனவும், தொழிலுக்கு செல்வதுபோல் போதைபொருள் […]

வாழ்வியல்

சாப்பிடும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய விடயங்கள்!

  • July 11, 2023
  • 0 Comments

அன்றாட செயல்பாடுகளில் முக்கியமான ஒன்று உணவு ஆரோக்கியமான உணவை சாப்பிடும் போது சிலவற்றை செய்யாமல் இருப்பது நமது உடலுக்கு சத்துக்கள் சேர உதவும். அதன்படி நாம் சாப்பிடும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் கூட உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக சாப்பிடும்போது சிலவற்றை செய்தால் உடலுக்கு தேவையான சத்து கிடைக்காது. சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பதால் உடல் விரிவாகி சாப்பாடு எளிதில் உள்ளே செல்ல உதவும். மேலும் […]