ஆப்பிரிக்கா முக்கிய செய்திகள்

சூடானின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராயுமாறு ஐநா வலியுறுத்தல்!

  • May 1, 2023
  • 0 Comments

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய இரு தரப்பினரும் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். சூடான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவின் தாக்குதலால் 34 பேர் படுகாயம்!

  • May 1, 2023
  • 0 Comments

டினிப்ரோ பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட், பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து குழந்தைகள் உள்பட 34 பேர் காயமடைந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலானவர்கள் எலும்பு முறிவு, வெட்டுக்காயங்கள், உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தீவிர   சிகிச்சைப்  பிரிவில் 45 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்கள் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 25 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளமை […]

இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பயங்கரவாதிகளின் 14 மொபைல் மெசஞ்சர்களை முடக்கிய மத்திய அரசு!

  • May 1, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை இந்திய மத்திய அரசுமுடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளிடம் இருந்து தகவல்களைப் பெற 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்த செயலிகளை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட செயலிகளை தற்போது மத்திய அரசு முடக்கியுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

இலங்கை

குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!

  • May 1, 2023
  • 0 Comments

குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குவைத் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தை ஏற்படுத்திய இளைஞன் தைமா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குவைத்தை தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

சமையல் எரிவாயுவின் விலை குறைவடையும் என அறிவிப்பு!

  • May 1, 2023
  • 0 Comments

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க ‘எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

மனைவியை கொலை செய்ய இன்சுலின் ஊசியை பயன்படுத்திய வைத்தியர்!

  • May 1, 2023
  • 0 Comments

தனது இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியைப் பலவந்தமாகச் செலுத்தி அவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதால் மயக்கமடைந்த வைத்தியரின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி […]

வட அமெரிக்கா

கனடாவில் உள்ள சூடானியர்கள் தங்கள் விசாவை நீட்டித்துக் கொள்ள அனுமதி

  • May 1, 2023
  • 0 Comments

சூடானில் வன்முறை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கனடாவில் உள்ள சூடான் மக்கள் தங்கள் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் சனிக்கிழமை குறித்த தகவலை அறிவித்ததுடன், இது ஏப்ரல் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், சூடான் மக்கள் தங்கள் விசாவை நீட்டித்துக்கொள்ளலாம் அல்லது பார்வையாளர், மாணவர் அல்லது தற்காலிக பணியாளராக அவர்களின் நிலையை இலவசமாக மாற்றவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றார். மட்டுமின்றி தற்காலிகமாக பணியாற்றும் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை துரிதப்படுத்திய ரஷ்யா!

  • May 1, 2023
  • 0 Comments

உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 18 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அந்த தாக்குதல்களை  முறியடித்ததாகவும், ஆயுதப்படைகளின் தளபதி தெரிவித்துள்ளார். இதன்படி 18 ஏவுகணைத் தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு “மூலோபாய விமானப் போக்குவரத்து விமானங்கள்” பயன்படுத்தப்பட்டதாகவும், வான்வழித் தாக்குதல் சைரன்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததாகவும் ஆயுதப்படைகளின் தளபதியான Valeriy Zaluzhnyi கூறினார். ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ஏவுகணை […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

விளம்பரத்தால் சிறைக்கு செல்லவுள்ள லாஸ்லியா! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

  • May 1, 2023
  • 0 Comments

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானி, லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது என்பதும் இந்த சட்டத்திற்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

யாழில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்!

  • May 1, 2023
  • 0 Comments

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணத்தில் 175 பேர் தவறான முடிவை எடுத்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். அதேபோல்  இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான […]

You cannot copy content of this page

Skip to content